கியா மோட்டார்ஸ் இந்தியா நிறுவனத்தின் அடுத்த எம்பிவி ரக மாடலாக கார்னிவல் விற்பனைக்கு பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள 2020 ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் வெளியாக உள்ளது. இந்தியாவில் கிடைக்கின்ற இன்னோவா கிரிஸ்டா உட்பட உயர் ரக பீரிமியம் எம்பிவி மாடல்களான பென்ஸ் வி கிளாஸ், டொயோட்டா வெல்ஃபயர் போன்ற மாடல்களை எதிர் கொள்ள உள்ளது.
சர்வதேச அளவில் கார்னிவல் அல்லது செடோனா என்ற பெயரில் 6, 7,8, 9 மற்றும் 11 இருக்கைகள் கொண்ட மாடலாக விற்பனை செய்யப்படுகின்றது. இந்திய சந்தையில் 6 இருக்கை, 7 இருக்கை மற்றும் 8 இருக்கை என மூன்று விதமான வேரியண்டுகளில் விற்பனைக்கு கிடைக்க உள்ளதை முன்பே உறுதிப்படுத்தியுள்ள நிலையில், தற்போது வெளியிடப்பட்ட டீசரின் மூலம் விற்பனைக்கு கிடைக்க உள்ளதை உறுதி செய்துள்ளது.
கியா செல்டோஸ் காரில் இடம்பெற்றுள்ள 30க்கு மேற்பட்ட கனெக்ட்டிவிட்டி சார்ந்த வசதிகளை வழங்கும் UVO வசதி இணைக்கப்பட உள்ளது.
கியா கார்னிவல் காரில் பிஎஸ் 6 மாசு உமிழ்வுக்கு இணக்கமான 2.2 லிட்டர், 4-சிலிண்டர், டர்போ டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 202 பிஎஸ் பவர் மற்றும் 441 என்எம் டார்க் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் மற்றும் 6-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும் கிடைக்கலாம். இந்தியாவில் கார்னிவல் கார் பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள ஆட்டோ எக்ஸ்போ 2020 அரங்கில் காட்சிப்படுத்தப்பட்டு விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது. இந்த காரின் விலை ரூ.30 லட்சம் (எக்ஸ்ஷோரூம்) தொடங்கலாம்.