• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

இந்தியா வரவுள்ள கியா கார்னிவல் காரின் விபரம் வெளியானது

by MR.Durai
5 December 2019, 7:29 pm
in Car News
0
ShareTweetSend

கியா கார்னிவல்

இந்திய சந்தையில் கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அடுத்த காராக கார்னிவல் எம்பிவி ரக மாடல் 6, 7 மற்றும் 8 என மூன்று விதமான மாறுபட்ட இருக்கை ஆப்ஷனுடன் ரூ. 30 லட்சம் ஆரம்ப விலையில் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சர்வதேச அளவில் கார்னிவல் அல்லது செடோனா என்ற பெயரில் 6, 7,8, 9 மற்றும் 11 இருக்கைகள் கொண்ட மாடலாக விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற இன்னோவா கிரிஸ்டா, பென்ஸ் வி கிளாஸ் மற்றும் டொயோட்டா வெல்ஃபயர் போன்ற மாடல்களுக்கு சவாலினை ஏற்படுத்த  உள்ளது.

டாப் வேரியண்டுகளில் கால்களை நீட்டிக்கொள்ளும் வகையிலான லெக்  ரெஸ்ட் மற்றும் ஆர்ம்ரெஸ்டுகளுடன் கேப்டன் இருக்கைகள், பின்புற இருக்கைகளுக்கு 10.1 அங்குல திரை பெற்ற பொழுதுபோக்கு அம்சம், கியாவின் UVO கனெக்ட்டிவிட்டி, அகலமான தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், இரண்டு சன்ரூஃப், 3 மண்டல ஏசி கட்டுப்பாடு இருக்கலாம். மிக சிறப்பான பாதுகாப்பு வசதிகளை பெற்றதாக விளங்க உள்ளது.

கியா கார்னிவல் காரில் பிஎஸ் 6 மாசு உமிழ்வுக்கு இணக்கமான 2.2 லிட்டர், 4-சிலிண்டர், டர்போ டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 202 பிஎஸ் பவர் மற்றும் 441 என்எம் டார்க் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் மற்றும் 6-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும் கிடைக்கலாம்.

இந்தியாவில் கார்னிவல் கார் பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள ஆட்டோ எக்ஸ்போ 2020 அரங்கில் காட்சிப்படுத்தப்பட்டு விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது. இந்த காரின் விலை ரூ.30 லட்சம் (எக்ஸ்ஷோரூம்) தொடங்கலாம்.

Tags: Kia CarnivalKia Motors
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

526 கி.மீ ரேஞ்சுடன் கியா சிரோஸ் EV காரின் முன்பதிவு தொடங்கியது

ஜூலை 24ல் 2026 பிரெஸ்ஸாவை வெளியிடும் மாருதி சுசூகி

அப்கிரேட் ஸ்டைலுக்கு புதிய மாருதி சுசூகி ஈகோ ஸ்டார் எடிஷன் அறிமுகம்.!

2027-க்குள் ஹூண்டாயின் இரண்டு புதிய அதிரடி எஸ்யூவிகள்.!

10 லட்சத்திற்கும் குறைவான விலையில் சன்ரூஃப் உள்ள டாடா நெக்ஸான் அறிமுகம்

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

மார்ச் 17ல், புதிய டஸ்ட்டர் விலையை அறிவிக்க தயாராகும் ரெனால்ட் இந்தியா.!

2026 டாடா பஞ்ச் புதிய அம்சங்களுடன் ரூ. 5.59 லட்சத்தில் வெளியானது

ரூ. 13.66 லட்சம் முதல் ஆரம்பம் மஹிந்திரா XUV 7XO அறிமுகமானது

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan

Exit mobile version