மஹிந்திரா வெளியிட்டுள்ள ஒன்பது இருக்கை கொண்ட பொலேரோ நியோ பிளஸ் (Bolero Neo Plus) காரில் இடம் பெற்று இருக்கின்ற இரண்டு வேரியண்டுகள் மற்றும் பல்வேறு சிறப்பு அம்சங்கள் உட்பட அனைத்து விபரங்களையும் தொடர்ந்து தமிழ்நாட்டின் ஆன்ரோடு விலையும் அறிந்து கொள்ளலாம்.
2+3+4 என்ற முறையில் ஒன்பது இருக்கைகள் கொண்டுள்ள இந்த மாடலில் P4 மற்றொன்று P10 இரண்டு வேரியண்டுகள் இடம் பெற்று இருக்கின்றது. பொதுவாக 2.2 லிட்டர் எம்-ஹாக் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டிருக்கின்றது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 118 bhp பவரையும் 280 Nm டார்க் வழங்குகின்றது இதில் ஆறு வேக மேனுவல் கியர்பாக்ஸ் மட்டுமே பொருத்தப்பட்டுள்ளது.
பொலேரோ நியோ+ வேரியண்ட் வாரியான வசதிகள்
இரு வேரியண்டுகளிலும் பாதுகாப்பு சார்ந்த அம்சங்களில் ஏபிஎஸ் உடன் இபிடி, இரண்டு ஏர்பேக்குகள், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார, சீட் பெல்ட் ரிமைண்டர் சிஸ்டம் ஆனது கொடுக்கப்பட்டிருக்கின்றது. கூடுதலாக P10 வேரியண்டில் ரிவர்ஸ் பார்க்கிங் அசிஸ்ட் உள்ளது. கருப்பு, வெள்ளை மற்றும் சில்வர் என மூன்று நிறங்களை கொண்டுள்ளது.
பொலேரோ நியோ+ P4 வேரியண்டில் எக்ஸ் வடிவ பம்பர், ஸ்டீல் வீலுடன் வீல் சக்கரங்கள், வினைல் அப்ஹோல்ஸ்டரி இரண்டாவது வரிசையில் நடுவில் அமருபவர்களுக்கு மடிப்பகுதியில் பெல்ட், சென்டரல் லாக்கிங் அமைப்பு, மைக்ரோ ஹைப்ரிட் தொழில்நுட்பம் ஈக்கோ மோடு உடன் கூடிய ஏசி , 12V சார்ஜிங் போர்ட்டுகள் உள்ளன.
பொலேரோ நியோ+ P10 வேரியண்டில் P4-ல் உள்ள வசதிகளுடன் கூடுதலாக அல்லது அதற்கு மாற்றாக, இரு பிரிவுகளைக் கொண்ட டிஜிட்டல் கிளஸ்ட்டர், ஒன்பது அங்குல இன்ஃபோ டைமண்ட் சிஸ்டம், அலாய் வீல் குரோம் சேர்க்கப்பட்ட கிரில், முன்புறத்தில் ஆம் ரெஸ்ட், பேப்ரிக் அப் ஹோல்ஸ்ட்ரி, ஐஎஸ்ஓ பிக்ஸ் சைல்ட் இருக்கைகள், ரிமோட் கீ வசதி, ஸ்டியரிங் மவுண்ட் கண்ட்ரோல்கள், பணி விளக்குகள், பின்புற வைப்பர் மற்றும் வாசர் உடன் பின்புற டிஃபோகர் போன்ற வசதிகள் உள்ளன.
பொலேரோ நியோ+ டிசைன்
முன்பாக மஹிந்திரா நிறுவனம் விற்பனை செய்து வந்த TUV300 எஸ்யூவி காரினை பொலிரோ நியோ என பெயர் மாற்றி அறிமுகம் செய்த நிலையில் தற்பொழுது இந்த மாடலானது நியோ பிளஸ் என்ற வேரியண்டில் கூடுதலாக ஒன்பது இருக்கைகளுடன் வந்துள்ளது.
இந்த ஒன்பது இருக்கைகள் பின்புறத்தில் அமைந்துள்ள இருக்கை அமைப்புகள் ஆனது முகம் பார்த்து அமரும் வகையில் பக்கெட் இருக்கையாக கொடுக்கப்பட்டுள்ளது பின்புறத்தில் மட்டும் நான்கு நபர்கள் அமர்ந்து கொள்ளலாம்.
குறிப்பாக வர்த்தக ரீதியான பயன்பாடுகளுக்கும் பெரிய குடும்பங்களுக்கும் ஏற்றதாக அமைந்திருக்கின்றது ஆனாலும் இதனுடைய பாதுகாப்பு சார்ந்த அம்சங்கள் எந்த அளவுக்கு இருக்கும் என்பது குறித்து உறுதியான தகவலும் இல்லை.
இந்திய சந்தையில் கிடைக்கின்ற எம்பிவி ரக மாடல்களுக்கு ஒரு கடும் சவாலாக அமைந்திருக்கின்றது இந்த பொலிரோ நியோ + மாடலுக்கு போட்டியாக மாருதி எர்டிகா, XL6, கியா கேரன்ஸ், ஸ்கார்பியோ கிளாசிக் போன்ற மாடல்கள் உள்ளன.
Mahindra Bolero Neo + on road price
மஹிந்திரா பொலிரோ நியோ ப்ளஸ் வேரியண்டின் எக்ஸ் ஷோரூம் விலையானது ரூபாய் 11.39 லட்சம் முதல் ரூ.12.49 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மஹிந்திரா பொலேரோ நியோ பிளஸ் ஆன்ரோடு விலை ரூ. 14.52 லட்சத்தில் துவங்குகின்றது.
- Mahindra Bolero Neo + P4 – ₹ 14,51,761
- Mahindra Bolero Neo + P10 – ₹ 15,86,650
(on-road price in Tamil Nadu)