• கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result

2024 கியா கேரன்ஸ் எம்பிவி விலை மற்றும் சிறப்புகள்

by MR.Durai
6 April 2024, 8:19 am
in Car News
0
ShareTweetSend

2024 கியா கேரன்ஸ் எம்பிவி விலை

கியா நிறுவனத்தின் 2024 ஆம் ஆண்டிற்கான கேரன்ஸ் எம்பிவி மாடலில் கூடுதலாக டீசல் மேனுவல் கியர்பாக்ஸ் உட்பட பல்வேறு வேரியண்டுகளில் கூடுதல் வசதிகள் சேர்க்கப்பட்டு மொத்தமாக 30 வேரியண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

புதிதாக இணைக்கப்பட்டுள்ள Premium (O), Prestige (O), மற்றும் Prestige+ (O) என மூன்று வேரியண்டுகள் சேர்க்கப்பட்டிருப்பதுடன் டாப் எக்ஸ்-லைன் வேரியண்டில் டேஷ்கேம் மற்றும் 7 இருக்கை வகை ஆப்ஷனலாக உள்ளது.

MY2024 Kia Carnes

கேரன்ஸ் 2024 மாடலில் தொடர்ந்து 1.5 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என மூன்று விதமான எஞ்சின் ஆப்ஷன் பெற்றதாக உள்ளது.

1.5 லிட்டர் GDI டர்போ பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக குதிரைத்திறன் 160 bhp மற்றும் 253 Nm டார்க் வெளிப்படுத்தும். இந்த மாடலில் 6 வேக மேனுவல் மற்றும் 7 வேக டியூவல் கிளட்ச் ஆட்டோ கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும்.

1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின், அதிகபட்சமாக 113 பிஹெச்பி மற்றும் 144 என்எம்  டார்க்கை உருவாக்குகிறது. இந்த என்ஜின் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மட்டும் பெற்றுள்ளது.

இறுதியாக, கேரன்ஸ் டீசல் காரில் 1.5-லிட்டர் VGT டீசல் என்ஜினைப் பொறுத்தவரை, 113 பிஹெச்பி மற்றும் 250 என்எம் டார்க்கை உருவாக்க வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், 6 ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸ், 6 வேக iVT மற்றும் 6-ஸ்பீட் டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர் பொருத்தப்பட்டுள்ளது.

புதிய கேரன்ஸ் வேரியண்ட் வசதிகள் பின் வருமாறு ;-

  • Premium (O) வேரியண்டில் கீலெஸ் என்ட்ரி, 8-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன், ஷார்க் ஃபின் ஆண்டெனா, ஸ்டீயரிங் வீல் மவுண்டட் சுவிட்சுகள் மற்றும் பர்க்லர் அலாரம் ஆகியவற்றைப் பெறுகிறது.
  • Prestige (O) வகையில் 6- அல்லது 7-இருக்கை ஆப்ஷன், லெதரெட் சுற்றப்பட்ட கியர் நாப், புஷ் பட்டன் வசதியுடன் ஸ்மார்ட் கீ, எல்இடி விளக்குகள் மற்றும் பொசிஷனிங் லேம்ப் ஆகியவற்றை பெறுகிறது.
  • ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மட்டுமே கிடைக்கும் Prestige+ (O) வேரியண்டில், எல்இடி விளக்கு மற்றும் எலக்ட்ரிக் சன்ரூஃப் பெறுகிறது.
  • புதிதாக Pewter Olive நிறத்தை பெறுகின்றது.
  • புதிதாக வந்துள்ள டீசல் மேனுவல் விலை ரூ.12.67 லட்சத்தில் துவங்குகின்றது.

கியா கேரன்ஸ் விலை ரூ.10.52 லட்சம் முதல் ரூ.19.67 லட்சம் (எக்ஸ்ஷோரூம்) வரை கிடைக்கின்றது.

Related Motor News

சிஎன்ஜி ஆப்ஷனில் வெளியான கியா காரன்ஸ் எம்பிவி சிறப்புகள்.!

ரூ.2 லட்சம் வரை சிறப்பு சலுகையை அறிவித்த கியா இந்தியா

21,000க்கு கூடுதலான முன்பதிவுகளை கடந்த கியா காரன்ஸ் கிளாவிஸ்

விரைவில் டாக்சி சந்தைக்கு ஏற்ற கியா காரன்ஸ் கிளாவிஸ் இவி அறிமுகமாகிறது

490Km ரேஞ்ச் வழங்கும் கியா காரன்ஸ் கிளாவிஸ் EV ஜூலை 15ல் அறிமுகம்

மே 23 ஆம் தேதி கியா காரன்ஸ் கிளாவிஸ் விலை வெளியாகும்.!

Tags: KiaKia Carens
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

mahindra be6 batman edition suv

மீண்டும் வந்த மஹிந்திரா BE 6 பேட்மேன் எடிஷன் மார்ச் 10-ல் புக்கிங் தொடக்கம்!

renault bridger suv concept

ரெனால்ட்டின் ‘மினி டஸ்ட்டர்’ 2027ல் விற்பனைக்கு வருகின்றது.!

மார்ச் 17ல், புதிய டஸ்ட்டர் விலையை அறிவிக்க தயாராகும் ரெனால்ட் இந்தியா.!

2026 டாடா பஞ்ச் புதிய அம்சங்களுடன் ரூ. 5.59 லட்சத்தில் வெளியானது

ரூ. 13.66 லட்சம் முதல் ஆரம்பம் மஹிந்திரா XUV 7XO அறிமுகமானது

நிசானின் மேக்னைட் விலை ரூ.32,000 வரை உயருகின்றது.!

ஹாரியர், சஃபாரியில் பெட்ரோல் என்ஜினை வெளியிட்ட டாடா மோட்டார்ஸ்

அடுத்த 18 மாதங்களில் 3 கார்களை வெளியிடும் நிசான் இந்தியா.!

நிசானின் புதிய எம்பிவி கிராவைட் ஜனவரி 2026ல் விற்பனைக்கு அறிமுகம்.!

மாருதி சுஸுகியின் வேகன்-ஆரில் ‘சுழலும் இருக்கை’ அறிமுகம்!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan