2015ம் ஆண்டின் சிறந்த காராக ஹூண்டாய் எலைட் ஐ20 காரும், சிறந்த பைக்காக ஹார்லி டேவிட்சன் ஸ்டீரீட் 750 தேர்வாகியுள்ளன.
சிறந்த கார் (ICOTY-Indian Car of the year) மற்றும் சிறந்த பைக் (IMOTY-Indian Motorcycle of the year) போன்றவற்றை அதன் வடிவமைப்பு, சொகுசு, எரிபொருள் சிக்கனம், கையாளும் திறன், சிறந்த நுட்பங்கள், விலை போன்ற முக்கியமான காரணிகளை கொண்டு தேர்வு செய்யப்படுகின்றது.
இம்முறை சிறந்த கார் ஹூண்டாய் எலைட் ஐ20 வென்றுள்ளது. ஹூண்டாய் நிறுவனம் தொடர்ந்து இரண்டாவது முறையாக இந்த விருதினை பெறுகின்றது. கடந்த வருடம் சிறந்த காராக ஹூண்டாய் கிராண்ட ஐ10 வென்றது.
சிறந்த பைக் ஹார்லி டேவிட்சன் ஸ்டீரீட் 750 மிகவும் திறன் மிகுந்த பைக்கான ஹார்லி டேவிட்சன் ஸ்டீரீட் 750 பல சிறப்புகளை பெற்ற பைக்காகும். ஹார்லி டேவிட்சன் ஸ்டீரீட் 750 பைக்கின் விலை ரூ.4.27 லட்சம்.(ex-showroom)
ஜேகே டயர்ஸ் கடந்த 10 ஆண்டுகளாக சிறந்த கார் மற்றும் சிறந்த பை விருதினை வழங்கி வருகின்றது.