மஹிந்திரா & மஹிந்திரா (Mahindra) மற்றும் அமெரிக்காவின் நேவிஸ்டார் (Navistar) நிறுவனங்கள் இனைந்து 15.4 பில்லியன் மூதலீட்டில் Mahindra Navistar Automotive Ltd (MNAL) கடந்த 2010 ஆம் ஆண்டு சக்கன(மும்பை அருகே) ஆலையில் உற்பத்தி தொடங்கியது.
இந்திய சாலைகளில் அதிகம் ஆக்கரமிப்பு செய்து வந்த டாடா(TATA) , லைலேன்ட்(Ashok Leyland) ஐசர் (Eicher-now Volvo-Eicher joint venture) போன்ற நிறுவனங்களுக்கு போட்டியாக களம் கண்ட MNAL இந்திய சாலைகளில் 5000 வாகனங்களுக்கு மேல் ஆக்கரமிக்க தொடங்கி உள்ளது. இவை அனைத்திற்க்கும் சிம்ம சொப்பனமாக களம் கண்டுள்ள உலகின் NO.1 TRUCK பதிவை பதிவு செய்தோம். விரைவில் ஸ்கேனையா (SCANIA) களம் காண உள்ளது.
மஹிந்திரா நிறுவனத்தின் இந்திய அளவில் உள்ள செல்வாக்கு (டிராகட்ர்,கார்) அவர்களுக்கான நிரந்தர MNAL இடத்தைப் பிடிக்க உதவி வருகிறது. அமெரிக்காவில் பல ஆண்டுகளாக சிறப்பாக செயல்படும் நேவிஸ்டார் தன்னுடைய சிறப்பான தொழில்நுட்ப்த்தை இந்தியாவில் களமிறக்கியுள்ளது.
MNAL நிறுவனத்தின் வளர்ச்சி எதிர்பார்த்தை விட சிறப்பாக இருக்கின்றது. இந்திய HCV(Heavy Commercial vehicles) மார்க்கட்டில் தனக்கேன தனி இடத்தையும் சிறப்பான வளர்ச்சியை அடைந்து வருகிறது. இந்த ஆண்டுக்குள் 50,000 வாகனங்களை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக MNAL நிறுவனத்தின் மானேஜிங் டைரக்டர் நலின் மேத்தா(Nalin Mehta) கூறியுள்ளார்.
ஆக்டோபர் 2010 ஆம் ஆண்டு 8 டீலர்களுடன் தன் சேவையை தொடங்கிய நேவிஸ்டார் தற்பொழுது 56 HCV டீலர்களுடன் விரிவடைந்துள்ளது, 22 LCV டீலர்கள்,221 அங்கிகரிக்கப்பட்ட சர்வீஸ் சென்டர்கள் மற்றும் 703 ரோடு சர்விஸ்(Mobile workshop).
MNAL HCV
5000 வாகனங்களுக்கு மேல் விற்பனை செய்துள்ளது. மாடல்கள் MN25,MN25(tipper)MN31,MN40 and MN49
MNAL LCV
MNAL நிறுவனம் என்ஜினுக்கு என்று தனி MAXXFORCE தொழிற்சாலையை இயக்கி வருகிறது. 170hp ,210hp மற்றும் 270hp கொண்டு வாகனங்களை இயக்குகிறது. 4 வருட வாராண்டியும் தருகிறது.
ஏற்றுமதி
தென்ஆப்பரிக்கா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளனர்.
MNAL வாடிக்கையாளர்கள்
DARCL, Kaushik Logistics, Three Star Shipping, Siri Tecon, AT Transport, Chaudhary Transport, Pink Logistics, Namakkal Transport Corporations (NTC), Janata Roadways மற்றும் Siddhi Vinayak Logistics
NO LONGER OK