இந்தியாவில் முதன்முறையாக கனெக்ட்டிவிட்டி சார்ந்த வசதிகளை பெற்ற டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் மூன்று சக்கர ஆட்டோ ரிக்ஷா விற்பனைக்கு ரூ.2.95 லட்சம் ஆக அறிவிக்கப்பட்டு, முதற்கட்டமாக டெல்லி, உத்திரபிரதேசம், ஜம்மூ மற்றும் காஷ்மீர், பீகார் மற்றும் மேற்கு வங்காளத்தில் கிடைக்க துவங்கியுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட பிற மாநிலங்களில் அடுத்த சில மாதங்களுக்கு பிறகு கிடைக்க உள்ளது.
TVS King EV Max
51.2V lithium-ion LFP முறையிலான 9.2Kwh பேட்டரி பொருத்தப்பட்டு PMSM மோட்டார் மூலம் 11KW பவர் மற்றும் 40 Nm டார்க் வெளிப்படுத்துகின்ற நிலையில் அதிகபட்சமாக சிங்கிள் சார்ஜில் 179 கிமீ ரேஞ்ச் வழங்கும் என சான்றிதழ் வழங்கப்பட்டு ஈக்கோ, சிட்டி மற்றும் பவர் என மூன்று விதமான ரைடிங் மோடுகளை பெற்றுள்ள கிங் இவி மேக்ஸ் மாடலை 3KW சார்ஜரை கொண்டு 0-100% சார்ஜிங் பெற 3.30 மணி நேரமும், 0-80% பெற 2.15 மணி நேரம் தேவைப்படும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
0-30கிமீ வேகத்தை எட்ட 3.7 வினாடிகள் எடுத்துக் கொள்ளும் நிலையில் கிங் EV மேக்ஸ் அதிகபட்சமாக மணிக்கு 60 கிமீ வேகத்தில் பயணிக்க திறன் பெற்றுள்ளது. இந்த ஆட்டோ ரிக்ஷாவில் ECO பயன்முறை: மணிக்கு 40 கிமீ; City: மணிக்கு 50 கிமீ; Power: மணிக்கு 60 கிமீ கொண்டு இந்த வாகனம் விசாலமான கேபின் மற்றும் சவுகரியமான இருக்கை வடிவமைப்பு மூலம் பயணிகளின் வசதியை அதிகப்படுத்துவதோடு பயணத்தையும் சிறப்பாக மேற்கொள்ள உதவுகின்றது.
இந்திய எலெக்ட்ரிக் மூன்று சக்கர ஆட்டோ பிரிவில் முதன்முறையாக கனெக்ட்டிவிட்டி சார்ந்த டிவிஎஸ் SmartXonnect ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி வசதிகள், முழுமையான எல்இடி விளக்குகள், 31 டிகிரி கோணத்தில் ஏறும் திறனை பெற்றுள்ளது.
6 ஆண்டுகள் அல்லது 150,000 கிமீ (எது முதலில் வருகின்றதோ அதுவரை) உத்தரவாதம், முதல் 3 ஆண்டுகளுக்கு 24/7 சாலையோர உதவியை டிவிஎஸ் மோட்டார் அறிவித்துள்ளது.