டாடா மோட்டார்ஸ் சிறிய ரக வர்த்தக வாகனங்கள் பிரிவில் இன்ட்ரா V70, இன்ட்ரா V20 கோல்டு பிக்கப் மற்றும் ஏஸ் HT+ ஆகிய புதிய மாடல்களுடன் மேம்பட்ட V50 மற்றும் ஏஸ் டீசல் ஆகியவை விற்பனைக்கு வெளியாகியுள்ளது.
தற்பொழுது டாடா இன்ட்ரா பிக்கப் வரிசையில் V10 , V20, V20 கோல்டு, V20 கோல்டு பை-ஃப்யூவல், V30, V50 மற்றும் V70 ஆகியவற்றுடன் டாடா ஏஸ் வரிசையில் புதிய ஏஸ் HT+ உடன் ஏஸ் இவி, ஏஸ் பெட்ரோல், ஏஸ் கோல்டு சிஎன்ஜி, ஏஸ் கோல்டு டீசல் ஆகியவை உள்ளது.
Tata Intra V70
1700 கிலோ சுமை தாங்கும் திறனுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ள டாடா இன்டரா V70 பிக்கப் டிரக்கில் 9.7 மீட்டர் நீளம் (2960mm) உள்ள கார்கோ பாடி கொடுக்கப்பட்டுள்ளது. 80 hp பவரை வழங்கும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் அதிகபட்சமாக 220Nm டார்க் வெளிப்படுத்துவதுடன் சிறப்பான எரிபொருள் சிக்கனத்தை வழங்குகின்றது. மிக சிறப்பான சமை தாங்கும் திறன் பெற்ற இந்த மாடல் வாடிக்கையாளர்கள் தங்கள் விருப்பமான சேவைக்கு பயன்படுத்தலாம்.
Tata Intra V20 Gold Bi-fuel
இந்தியாவின் முதல் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி இரு எரிபொருள் பயன்படுத்தி பிக்அப் டிரக் டாடா இன்ட்ரா V20 கோல்டு ஆனது அதிகபட்சமாக 1200 கிலோ சுமை தாங்கும் திறனுடன் வந்துள்ளது. 2690mm உள்ள கார்கோ பாடி கொடுக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 57.6 hp பவர் மற்றும் 106 Nm டார்க் வழங்குவதுடன், சிஎன்ஜி முறையில் 52 hp பவர் மற்றும் 95 Nm டார்க் வழங்குகின்றது.
முழுமையான சிங்கிள் டிரிப் மூலம் 800 கிமீ வரை பயணிக்கலாம் என டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.
Tata Ace HT+
20 லட்சத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்களைக் கொண்ட இந்தியாவின் மிகவும் வெற்றிகரமான டாடா ஏஸ் டிரக் வரிசையில் 900 கிலோ அதிக சுமை தாங்கும் திறன் பெற்ற புதிய ஏஸ் HT+ மாடலில் உள்ள 800cc டீசல் என்ஜின் அதிகபட்சமாக 35bhp பவர் மற்றும் 85Nm டார்க் வெளிப்படுத்துகின்றது.
இதுதவிர, மேம்பட்ட இன்ட்ரா வி50 மற்றும் ஏஸ் டீசல் வந்துள்ளது. இந்த புதிய அறிமுகங்களுடன் மூலம் டாடா மோட்டார்ஸ் சிறிய வணிக வாகனங்கள் மற்றும் பிக்அப்களை வாடிக்கையாளர்கள் தங்கள் தேவைக்கு ஏற்ற மிகவும் உகந்த வாகனத்தை தேர்வு செய்ய உதவுகிறது. இந்த வாகனங்களுக்கான முன்பதிவு இப்போது நாடு முழுவதும் உள்ள அனைத்து டாடா மோட்டார்ஸ் வர்த்தக வாகனங்கள் டீலர்ஷிப்களிலும் துவங்கப்பட்டுள்ளது.