மஹிந்திரா நிறுவனம் சுப்ரோ ப்ராஃபிட் எக்ஸ்செல் டிரக் மாடலை டீசல் மற்றும் சிஎன்ஜி என இரண்டிலும் விற்பனைக்கு ரூ.6.61 லட்சம் விலையில் அறிமுகம் செய்துள்ளது. மிக சிறப்பான மைலேஜ் மற்றும் 900 கிலோ சுமை தாங்கிம் திறனை பெற்றுள்ளது.
டீசல் மற்றும் சிஎன்ஜி என இரண்டு மாடலிலும் ஒரே 909சிசி என்ஜின் ஆனது பொருத்தப்பட்டுள்ளது. டீசல் மாடல் 26 bhp மற்றும் 55 Nm டார்க் வழங்குகின்றது.
Mahindra Supro Profit Truck Excel
டீசல் மற்றும் சிஎன்ஜி இரண்டு மாடல்களில் 909cc 2 சிலிண்டர் டீசல் எஞ்சின் 26 bhp மற்றும் 55 Nm, சிஎன்ஜி பயன்முறையில் 26.83 bhp மற்றும் 60 Nm டார்க் வழங்குகின்றது. இரண்டு மாடலும் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளன. டீசல் என்ஜின் ஆனது அதிகபட்சமாக மைலேஜ் லிட்டருக்கு 23.6 கிமீ ஆகும். சிஎன்ஜி பயன்முறையில் கிலோவிற்கு 24.8 கிமீ ஆகும்.
சுப்ரோ ப்ராபிட் எக்செல் டிரக் மூலம் சுமைகளைக் கையாளும் திறன் ஆனது டீசலுடன் 900 கிலோ பேலோடையும், சிஎன்ஜியுடன் 750 கிலோ பேலோடையும் எடுத்துக்கொள்கிறது.
900 கிலோ (டீசல்) & 750 கிலோ (CNG) சிறந்த பேலோட் திறனுக்காக 2050mm வீல்பேஸுக்கு நிலைத்தன்மையை வழங்கும் ஆன்டி-ரோல் பாடியுடன் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சம் ஆனது சுப்ரோ எக்ஸ்செல் டிரக் பெற்றுள்ளது.
ஆரம்பத்தில் 2015 முதல் விற்பனையில் உள்ள சுப்ரோ ஆனது 2 லட்சத்துக்கும் மேற்பட்ட டிரக்குகளை விற்பனை செய்துள்ளது. சுப்ரோ ப்ராபிட் எக்செல் டீசல் மாடல் விலை ₹6.61 லட்சம் மற்றும் CNG DUO வேரியண்ட் ₹6.93 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி).