சாதாரன ஜீடூ டிரக்கை விட 30 சதவீத கூடுதலாக மைலேஜ் வெளிப்படுத்தும் மஹிந்திரா ஜீடூ பிளஸ் மினி டிரக்கின் மைலேஜ் அதிகபட்சமாக லிட்டருக்கு 29.1 கிமீ ஆக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாகனத்தை இயக்குவதற்கு 625 சிசி ஒற்றை சிலிண்டர் நீர் மூலம் குளிரூட்டப்பட்ட நேரடி தெளிப்பான் முறையில் (டிஐ) டீசல் என்ஜின் ஆகும். 3600 ஆர்பிஎம்-ல் 16 பிஹெச்பி ஆற்றலை உருவாக்கும் வகையில் இந்த என்ஜின் டியூன் செய்யப்பட்டுள்ளது மற்றும் 1200-2200 ஆர்பிஎம்-ல் 38 என்எம் டார்க்கை உருவாக்குகிறது. அதே நேரத்தில் 4 ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. புதிய எஞ்சினுடன், ஜீட்டோ பிளஸ் இப்போது 30 சதவீதம் அதிக எரிபொருள் சிக்கனத்தை கொண்டுள்ளது. எனவே, லிட்டருக்கு 29.1 கிமீ மைலேஜ் வழங்குகிறது.
ஜீடோவின் புதிய மாறுபாடு 1 டன்னுக்கு குறைந்த இலகுரக கமர்ஷியல் வாகனமாக விளங்குகின்றது. வழக்கமான ஜீட்டோ மினி-டிரக்குடன் ஒப்பீடும்போது, பிளஸ் வேரியண்ட் மொத்த நீளம் 7.4 அடி நீளமுள்ள டெக் மற்றும் 715 கிலோ எடை சுமக்கும் திறன் கொண்டதாகும். மஹிந்திரா ஜீடூ பிளஸ் டிரக் 3 ஆண்டுகள் அல்லது 72,000 கிமீ (எது முந்தையது) என்ற உத்தரவாதத்துடன் வருகிறது.
700 கிலோ எடை தாங்கும் திறன் பெற்ற மஹிந்திரா ஜீடு பிளஸ் விலை ரூ.3.47 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் மும்பை) ஆக அறிவிக்கப்படுள்ளது.