இந்தியாவின் முன்னணி சிறிய வர்த்தக வாகன தயாரிப்பாளரான மஹிந்திரா வெளியிட்டுள்ள புதிய பொலிரோ மேக்ஸ் பிக்கப் டிரக்கில் ஏசி கேபின் மற்றும் கூடுதலாக 14 ஐமேக்ஸ் கனெக்ட்டிவிட்டி வசதிகளை பெற்று ரூ.8.49 லட்சம் முதல் ரூ.11.22 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படுள்ளது.
1.3 டன், 1.4 டன், 1.7 டன மற்றும் 2 டன் வரையில் சுமார் 7 வகைகளில் சிட்டி மற்றும் HD என இரு பிரிவில் 3050 mm நீளம் கொண்ட சுமை தாங்கும் கார்கோ பெட் கொண்டதாக விளங்குகின்ற டிரக்கில் 70 hp மற்றும் 220 Nm டார்க் வெளிப்படுத்துதுடன் அடுத்து 80 hp மற்றும் 250 Nm டார்க் என இரண்டு விதமான பவரை வழங்குகின்ற 2.5 லிட்டர் m2Di என்ஜின் 5 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.
புதிய பொலிரோ மேக்ஸ் பிக்கப் டிரக்கில் iMAXX அடிப்படையில், வாகன மேலாண்மை அமைப்பின் செயல்பாடு மற்றும் செயல்திறனை மேம்படுத்த உதவுகின்ற 14 புதிய அம்சங்களை அறிமுகப்படுத்துகிறது. முக்கிய முன்னேற்றங்களில் ஒன்றாக குறிப்பிட்ட எல்லையில் பயணிக்க உதவும் ஜியோஃபென்ஸ் அடிப்படையிலான வசதி மற்றும் நெறிப்படுத்தப்பட்ட செயல்பாடுகளுக்கான டிரைவர் கம் ஓனர் அம்சம் ஆகியவை உள்ளன.
புதிய மஹிந்திரா பொலிரோ மேக்ஸ் பிக்கப் டிரக்கின் ஆரம்ப விலை ரூ.8.49 லட்சம் முதல் துவங்குகின்றது. இந்தியாவில் அதிகம் விற்பனை ஆகின்ற பிக்கப் டிரக் மாடலாக விளங்குகின்றது.