ஒரு முறை சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 130 கிமீ பயணத்தை வழங்கவல்ல கைனடிக் சேஃபர் ஸ்டார் மூன்று சக்கர ஆட்டோ சரக்கு போக்குவரத்துக்கு ஏற்றதாக விற்பனைக்கு ரூ.2.20 லட்சம் (எக்ஸ்ஷோரூம் புனே) விலையில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த வாகனத்திற்கு மத்திய அரசின் ஃபேம் 2 ஆம் கட்ட சலுகைகள் கிடைக்கின்றது. 400 கிலோ பளுவை தாங்கும் திறன் கொண்டதாக விளங்குகின்றது.
கைனடிக் கீரின் எனெர்ஜி அண்ட் பவர் சொல்யூசன் நிறுவனத்தின் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ள மிக சிறப்பான சேஃபர் ஸ்டார் மாடல் பெருநகரங்களின் நெரிசல் மிகுந்த நகரங்களில் இ-காமர்ஸ் மற்றும் FMCG சரக்குகளை எடுத்துச் செல்லுவதற்கு ஏற்றதாக அமைந்துள்ளது.
கைனடிக் சஃபார் ஸ்டார் ஆட்டோவில் மேம்பட்ட லித்தியம் அயன் 48V பேட்டரியை கொண்டு 150 Ah சக்தியுடன் கொண்டுள்ளது. இந்த ஆட்டோவின் முழுமையான சார்ஜில் அதிகபட்சமாக 130 கி.மீ தூரத்தை வழங்குகிறது, ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் இரண்டு ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டுள்ளது. ஸ்வாப் முறையில் பேட்டரியை மாற்றிக் கொள்ளலாம். இந்த வாகனத்தில் உள்ள பேட்டரி மீது 3 ஆண்டு உத்தரவாதத்தையும் வழங்குகிறது.
ட்யூப்லர் அடிச்சட்டத்தை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள CED கோட்டிங் மற்றும் எவ்விதமான கால சூழ்நிலை மாறுபாட்டாலும் பாதிப்பும் ஏற்படாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
புதிய சஃபார் ஸ்டார் எலக்ட்ரிக் மூன்று சக்கர வண்டி அறிமுகம் குறித்து பேசிய கைனடிக் கிரீன் எனர்ஜி அண்ட் பவர் சொல்யூஷன்ஸின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி சுலஜ்ஜா ஃபிரோடியா மோத்வானி கூறுகையில், “எங்களின் புதிய மின்சார சத்தம் மற்றும் மாசு இல்லாத டெலிவரி ஆட்டோவாக விளங்குகின்றது. இ காமர்ஸ் மற்றும் எஃப்.எம்.சி.ஜி துறைகளுக்கு ஏற்றதாகும். இந்த ஆட்டோவின் மூலம் பெரும் மாநகராட்சி நிறுவனங்களால் கடைசி மைல் வரை பொருட்கள் கொண்டு செல்ல மற்றும் நகர்ப்புற கழிவுகளை சேகரிப்பதில் புரட்சியை ஏற்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது.
அதிக மாசுபடுத்தும் டீசல் 3 சக்கர வாகனங்களைப் பயன்படுத்தி ஒரு கி.மீ.க்கு ரூ. 3 வரை செலவாகின்ற நிலையில் இதனுடன் ஒப்பீடுகையில், இப்போது அமைதியான, மாசு உமிழ்வு இல்லாத விநியோக சேவைகளை எங்கள் சஃபார் ஸ்டாரைப் பயன்படுத்தி ஒரு கி.மீ.க்கு வெறும் 50 பைசாவில் வழங்க முடியும் என குறிப்பிட்டுள்ளார்.