2 முதல் 3.5 டன் சிறிய ரக வர்த்தக வாகனங்கள் பிரிவில் புரோ பிசினஸ் புரோ பிளானெட் ரேஞ்ச் (Pro Business Pro Planet range) எலக்ட்ரிக் டிரக் மூலம் நுழைந்துள்ள ஐஷர் டிரக் மற்றும் பஸ் நிறுவனம் (VECV) எலக்ட்ரிக் மட்டுமல்லாமல் எதிர்காலத்தில் சிஎன்ஜி மற்றும் டீசல் என மொத்தமாக மூன்று பிரிவிலும் இந்த டிரக்கினை வெளியிட உள்ளது.
ஏற்கனவே சந்தையில் 2 முதல் 3.5T பிரிவில் உள்ள டாடா ஏஸ், இன்ட்ரா மற்றும் அசோக் லேலண்ட தோஸ்த் வகை டிரக்குகளுக்கு சவால் விடுக்கும் வகையில் நுழைந்துள்ள ஐஷர் முதற்கட்டமாக எலக்ட்ரிக் டிரக் பிரிவில் வாடிக்கையாளர்களுக்கான சோதனையை ஏப்ரல் 2024 முதல் வழங்க உள்ளது.
Eicher Pro Business Pro Planet range
விற்பனைக்கு 2025 ஆம் ஆண்டு இரண்டாவது காலாண்டில் வெளியிடப்பட உள்ள இந்த எலக்ட்ரிக் டிரக் மாடல் பல்வேறு மாறுபட்ட பயன்பாடுகளுக்கு ஏற்ற வகையில் கஸ்டமைஸ் செய்வதுடன் மிக சிறப்பான நுட்பங்களை பெற்றிருக்கும்.
VE கமெர்ஷியல் வாகனங்கள் பிரிவு நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செய்ல் அதிகாரி, வினோத் அகர்வால் எலக்ட்ரிக் டிரக் பற்றி பேசுகையில், இந்தியாவின் வளர்ச்சியில் SCV (Small commercial Vehicles ) பிரிவின் பங்கை வலியுறுத்தினார். விரைவான நகரமயமாக்கல், வளர்ந்து வரும் இ-காமர்ஸ் வணிகம், அதிகரித்த தனிப்பட்ட நுகர்வு மற்றும் ஹப் மற்றும் ஸ்போக் விநியோகத்தின் உயர்வு ஆகியவற்றால் இயக்கப்படுகிறது.
“சிறந்த எரிபொருள் திறனுள்ள டிரக்குகளை வழங்குவதில் ஐஷர் சாதனை படைத்துள்ளது, மேலும் இந்த அறிவிப்பின் மூலம், வரும் ஆண்டுகளில் இந்தியாவின் நிலையான வளர்ச்சிக்கு முக்கியமான அதிநவீன தீர்வுகளை வழங்குவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை நாங்கள் மீண்டும் உறுதிப்படுத்துகிறோம்.” என குறிப்பிட்டுள்ளார்.
இந்நிறுவனம் 425 அங்கீகரிக்கப்பட்ட சேவை மையங்கள் மற்றும் 8,000 க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை மையங்கள் உட்பட 850க்கும் மேற்பட்ட டச் பாயின்ட்ஸ் உள்ளடக்கிய ஒரு விரிவான வலையமைப்பை நிறுவியுள்ளது. 240 இடங்களில் ‘Eicher Site Support’ மூலம், தடையற்ற உதவியை வழங்குகிறது.