அசோக் லேலண்ட் நிறுவனம், மொத்த வாகன எடை (GVW) 18.49 டன் கொண்ட புதிய இகாமெட் ஸ்டார் 1915 டிரக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 12.91 டன் எடையை ஏற்றும் திறன் கொண்ட பாடியை கொடுத்துள்ளது.
சிறப்பான எரிபொருள் சிக்கனம், அதிகப்படியான எடை தாங்கும் திறன் மற்றும் தொலைதூரம் தொடர்ந்து பயணிக்கும் திறனை கொண்டதாக அமைந்துள்ளது.
Ashok Leyland Ecomet Star 1915
இகோமெட் ஸ்டார் 1615, 1815 மற்றும் 1815+ ஆகிய மாடல்களை தொடர்ந்து வந்துள்ள 110 kW (150 hp) பவரை வழங்கும் H4 டீசல் என்ஜின் பெற்றுள்ள அசோக் லேலண்ட் இகாமெட் ஸ்டார் 1915 டிரக்கின் அதிகபட்ச டார்க் 450Nm ஆக வெளிப்படுத்துகின்றது.
இந்திய சந்தையில் முதன்முறையாக இடைநிலை வர்த்தக வாகனங்கள் பிரிவில், 18.49 டன் கொண்டதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இகாமெட் ஸ்டார் 1915 டிரக்கில் சிறப்பான லாஜிஸ்டிக்ஸ் பயன்பாடிற்கு ஏற்ற அகலமான கார்கோ பாடி 20 அடி நீளம் கொண்டு சுமை தாங்கும் திறன் 12.91 டன் பெற்றுள்ளது. 350 L மற்றும் 185 L என இருவிதமான டீசல் டேங்க் ஆப்ஷனை வழங்குகின்றது.
பல்வேறு பயன்பாடுகளில் அதிக பேலோட் திறனுக்கான தேவையை தொழில்துறை எதிர்பார்க்கிறது, இகாமெட் ஸ்டார் 1915 மூலம் அசோக் லேலண்ட் வாடிக்கையாளர்கள் இ-காமர்ஸ், பார்சல் டெலிவரி, புதிய தயாரிப்புகளின் போக்குவரத்து, வாகன பாகங்கள் போன்ற பயன்பாடுகளுக்கு ஏற்ற வகையிலான தீர்வை வழங்கும் கோரிக்கைகளை நிவர்த்தி செய்யும் வகையில் அமைந்துள்ளது.