வரும் அக்டோபர் 1, 2025 முதல் டிரக் ஒட்டுநர்களுக்கு சிறப்பான சவுகரியங்களை வழங்கும் வகையில் ஏசி கேபின் கட்டாயமாக பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என அரசு அறிவித்துள்ளது.
N2 மற்றும் N3 என இரு பிரிவுகளில் உள்ள வாகனங்களுக்கு மட்டும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Trucks get AC Cabin
குளிரூட்டப்பட்ட வசதி கொண்ட கேபின்களை “IS14618:2022” தரத்தின் அடிப்படையில் பொருத்தப்பட வேண்டும் அல்லது சேஸ் உற்பத்தியாளர்களும் ஏர் கண்டிஷனிங் சிஸ்டம் கிட்டை வழங்குவது கட்டாயம் இதனை பாடி பில்டர்கள் கேபின் கட்டுமானத்தின் பொழுது பொருத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
N2 என்படுகின்ற பிரிவில் 3.5 முதல் 12 டன்களுக்கு இடைப்பட்ட மொத்த வாகன எடை எடுத்துச் செல்லும் சரக்கு வாகனங்கள் மற்றும் N3 வகை எனப்படுகின்ற 12 டன்களுக்கு மேல் மொத்த வாகன எடையுடன் எடுத்துச் செல்லும் சரக்கு வாகனங்கள் ஆகும்.
வர்த்தக வாகனங்களில் ஏசி கேபினை பொறுத்து சுமார் ரூ.30,000 முதல் ரூ.50,000 வரை விலை அதிகரிக்கலாம் என டிரக் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.