மஹிந்திரா ஜீடூ காரினை போன்ற தோற்ற அமைப்பினை கொண்டுள்ளது. உட்புற இருக்கை மற்றும் டேஸ்போர்டு காரினை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.
ஜீடு டிரக்கில் புதிய 625சிசி எம்-டியூரா டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 11எச்பி மற்றும் 16 எச்பி என இரண்டு விதமான சக்தியில் கிடைக்கும். இதன் முறுக்கு விசை 38என்எம் ஆகும். ஜீடூ மினி டிரக் மைலேஜ் லிட்டருக்கு 36.7கிமீ ஆகும்.
சிறிய ரக ஜீடூ டிரக்கில் 600கிலோ சுமை தாங்கும் திறன் மற்றும் 700கிலோ சுமை தாங்கும் திறன் என இரண்டிலும் கிடைக்கும். 600கிலோ பேலோட் பிரிவில் 11எச்பி என்ஜினும் 16எச்பி ஆற்றலை தரும் என்ஜின் 700கிலோ பிரிவில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
மஹிந்திரா ஜீடூ வேரியண்ட் விபரம்
S , L மற்றும் X என மூன்று விதமாக பிரிக்கப்பட்டுள்ளது.
S வேரியண்டில்
S6-11 வேரியண்டில் 600 கிலோ சுமை தாங்கும் திறனை கொண்டுள்ளது. இதில் 11எச்பி ஆற்றலை தரும் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
S6-16 வேரியண்டில் 700 கிலோ சுமை தாங்கும் திறனை கொண்டுள்ளது. இதில் 16எச்பி ஆற்றலை தரும் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
L வேரியண்டில்
L6-11 வேரியண்டில் 600 கிலோ சுமை தாங்கும் திறனை கொண்டுள்ளது. இதில் 11எச்பி ஆற்றலை தரும் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
L6-16 வேரியண்டில் 600 கிலோ சுமை தாங்கும் திறனை கொண்டுள்ளது. இதில் 16எச்பி ஆற்றலை தரும் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
L7-11 வேரியண்டில் 700 கிலோ சுமை தாங்கும் திறனை கொண்டுள்ளது. இதில் 11எச்பி ஆற்றலை தரும் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
L7-16 வேரியண்டில் 700 கிலோ சுமை தாங்கும் திறனை கொண்டுள்ளது. இதில் 16எச்பி ஆற்றலை தரும் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
X வேரியண்டில்
X7-11 வேரியண்டில் 700 கிலோ சுமை தாங்கும் திறனை கொண்டுள்ளது. இதில் 11எச்பி ஆற்றலை தரும் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
X7-16 வேரியண்டில் 700 கிலோ சுமை தாங்கும் திறனை கொண்டுள்ளது. இதில் 16எச்பி ஆற்றலை தரும் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
5 விதமான வண்ணங்களில் ஜீடூ கிடைக்கும். அவை வெள்ளை , மஞ்சள் , சிவப்பு , நீலம் மற்றும் பீஜ் ஆகும்.12v சாக்கெட் மூலம் மொபைல் சார்ஜ் செய்ய இயலும் ,க்ளோவ் பாக்ஸ் , ரேடியோ மற்றும் ஆடியோ சிஸ்டம் உள்ளது.
Mahindra Jeeto LCV launched priced at Rs. 2.43 lakhs