இசுசூ நிறுவனத்தின் D-max பிக் அப் டிரக்கில் ஏசி மற்றும் கேப் அடிச்சட்ட வேரியண்ட் என இரண்டு வேரியண்ட்களை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.
வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்க்கு ஏற்ப கட்டமைத்துக்கொள்ளும் வகையில் அடிச்சட்டத்துடன் கொண்ட வேரியண்ட் மற்றும் ஒற்றை கேப் கொண்ட ஏசி வேரியண்ட்டும் அறிமுகம் செய்துள்ளது.
134பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய 2.5 லிட்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
இசுசூ நிறுவனம் நாடு முழுவதும் 20 டீலர்களை கொண்டுள்ளது. இந்த நிதி ஆண்டிற்க்குள் 60 டீலர்களாக உயர்த்த திட்டமிட்டுள்ளது.
இசுசூ D-max பிக் அப் டிரக் விலை விபரம் (சென்னை விலை)
இசுசூ D-max Single Cab — ரூ.6.54 லட்சம்
இசுசூ D-max Space Cab Flat Deck — ரூ.6.77 லட்சம்
இசுசூ D-max Space Cab Arched Deck — ரூ.7.74 லட்சம்