முழுமையான கருப்பு நிறத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட ரூ.18.31 லட்சத்தில் ஸ்கோடா குஷாக் எலிகென்ஸ் எடிசன் மாடல் 1.5 லிட்டர் TSI என்ஜின் கொண்டிருக்கின்றது. ஸ்லாவியா மாடலிலும் எலிகென்ஸ் எடிசன் வந்துள்ளது.
1.5-லிட்டர் TSI பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 148 bhp மற்றும் 250 NM டார்க் வழங்குகின்றது. இதில் ஆறு-வேக மேனுவல் மற்றும் DSG கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.
Skoda Kushaq
குஷாக் எலிகென்ஸ் எடிஷன் காரினை பிளாக் நிறத்தில் கொடுக்கப்பட்டு கதவு மற்றும் கிரில்லில் குரோம் பூச்சூ, பில்லர்களில் ‘எலிகன்ஸ்’ பேட்ஜ், பேட் விளக்குகள் மற்றும் 17-இன்ச் வேகா டூயல்-டோன் அலாய் வீல் ஆகியவற்றை கொண்டிருக்கின்றது.
இன்டிரியரில் 10-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே இணைப்பு, ஆடியோ சிஸ்டத்தில் ஆறு-ஸ்பீக்கர் அமைப்பு, தானியங்கி காலநிலை கட்டுப்பாடு, வயர்லெஸ் சார்ஜர், க்ரூஸ் கண்ட்ரோல், அட்ஜெஸ்டபிள் முன் இருக்கைகள், ஒளிரும் ஃபுட்வெல் பகுதி, மற்றும் ஸ்டீயரிங் வீலில் ‘எலிகன்ஸ்’ பேட்ஜ். டெக்ஸ்டைல் பாய்கள், அலுமினிய பெடல்கள் மற்றும் நேர்த்தியான மெத்தைகள், சீட்பெல்ட் மெத்தைகள் மற்றும் கழுத்து பகுதிக்கான தலையணைகள் ஆகியவையும் உள்ளன.
Kushaq Elegance Edition Manual – Rs. 18.31 லட்சம்
Kushaq Elegance Edition DSG – Rs. 19.51 லட்சம்
Skoda Slavia Elegance Edition MT Rs. 17,52,000
Skoda Slavia Elegance Edition AT Rs. 18,92,000
(எக்ஸ்-ஷோரூம்)