2019 பிராங்பர்ட் மோட்டார் ஷோவில் ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் 45 EV கான்செப்ட் மாடலை மிகவும் ஸ்டைலிஷாகவும் அதேவேளை முந்தைய மாடல்களின் தோற்ற உந்துதலை பின்பற்றி அற்புதமாக காட்சிப்படுத்தியுள்ளது.
1974 ஆம் ஆண்டின் போனி கூபே கான்செபட்டை 45 ஆண்டுகளுக்கு முன்பாக ஹூண்டாய் காட்சிப்படுத்தியது. இதன் வடிவமைப்பில் ஈர்க்கப்பட்ட புதிதாக 45 என்ற பெயரில் ஹூண்டாயின் மின்சார வாகனங்களுக்கான எதிர்கால வடிவமைப்பாக மையப்படுத்தி வெளியாகியுள்ளது. கூடுதலாக, இந்த கருத்து “மின்மயமாக்கல் மற்றும் ஆட்டோமேட்டிக் தொழில்நுட்பங்களின் கொண்டதாக இந்த கார் அனுபவத்தை வழங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
45 எலக்ட்ரிக் வாகன கான்செப்ட் ஆனது மோனோக்கூ பிளாட்பாரத்தில் 1920 களின் விமானங்களால் ஈர்க்கப்பட்ட ஏரோடைனமிக் மற்றும் இலகுரக வடிவமைப்பையும் பின்பற்றியதாக வரவுள்ளது. அசல் கூபே கான்செப்ட் போல நீட் மற்றும் கிளின் டீசைன் கொண்டதாக விளங்குகின்றது.
ஹூண்டாயின் எதிர்கால எலக்ட்ரிக் மற்றும் தானியங்கி கார்கள் இந்த கான்செப்ட்டின் உந்துதலில் வடிவமைக்கப்பட உள்ளது.