பஜாஜ் ஆட்டோவின் சேத்தக் 2901 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆனது மிக குறைவான விலையில் ரூபாய் 95,998 ஆக அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் இந்த மாடலுக்கான முன்பதிவு எண்ணிக்கை மிக குறைந்த காலகட்டத்தில் 20,000 முன்பதிவுகளை எட்டியுள்ளது. மேலும் தற்பொழுது இந்த சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆனது இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட டீலர்கள் மூலம் நாடு முழுவதும் விற்பனை செய்யப்படுவதாக இந்நிறுவனம் குறிப்பிடுகின்றது.
சேத்தக் 2.88kwh பேட்டரியை பெறுகின்ற இந்த மாடல் முழுமையான சிங்கிள் சார்ஜில் அதிகபட்சமாக 123 கிலோமீட்டர் ரேஞ்ச் ஆனது வழங்குகின்றது.
வண்ண டிஜிட்டல் கன்சோல், அலாய் வீல்கள் மற்றும் புளூடூத் இணைப்பு போன்ற அம்சங்கள் ரைடர் வசதி மற்றும் ஹில் ஹோல்ட், ரிவர்ஸ், ஸ்போர்ட் மற்றும் எகனாமி மோட்கள், கால் மற்றும் மியூசிக் கன்ட்ரோல், ‘ஃபாலோ மீ ஹோம்’ விளக்கு மற்றும் புளூடூத் ஆப் இணைப்பு போன்ற அம்சங்களை செயல்படுத்த டெக்பேக் மூலம் வாடிக்கையாளர்கள் மேம்பட்ட வசதிகளை தேர்வு செய்யலாம்.
சிவப்பு, வெள்ளை, கருப்பு, எலுமிச்சை மஞ்சள் மற்றும் அசூர் நீலம் என ஐந்து அற்புதமான வண்ணங்களில் கிடைக்கிறது.