இந்தியாவின் பஜாஜ் ஆட்டோ மற்றும் இங்கிலாந்தின் ட்ரையம்ப் மோட்டார் சைக்கிள் நிறுவனமும் இணைந்து நடுத்தர ரக மோட்டார்சைக்கிள்களை தயாரித்து சர்வதேச அளவில் விற்பனை செய்வதற்கான கூட்டணியை உருவாக்கியுள்ளது.
பஜாஜ்-ட்ரையம்ப் கூட்டணி
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்திய சந்தையில் பல்சர் உள்ளிட்ட பிரசத்தி பெற்ற பைக்குகளை விற்பனை செய்து வருகின்ற நிலையில் கேடிஎம் மற்றும் ஹஸ்க்வர்னா போன்ற பிராண்டுகளில் முக்கியமான அளவில் பங்குகளை பெற்றுள்ள நிலையில் இந்நிறுவனங்களில் உள்ள கேடிஎம் நிறுவனத்தை டியூக் 390 பைக்கில் இடம்பெற்றுள்ள அதே எஞ்சினை அடிப்படையாக கொண்டு டோமினார் பைக்கினை வெளியிட்டிருந்தது.
இங்கிலாந்து நாட்டை மையமாக கொண்டு செயல்படும் டிரையம்ப் மோட்டார்சைக்கிள் 600 சிசி முதல் 1000 சிசி க்கு மேற்பட்ட மோட்டார் சைக்கிள் சந்தையில் சிறப்பான பங்களிப்பினை சர்வதேச அளவில் கொண்டிருக்கின்ற இந்நிறுவனம் இந்திய சந்தையில் சிறப்பான வளர்ச்சி பெற்று வரும் நிலையில் குறிப்பிட்ட சில மாடல்கள் உள்நாட்டிலே உற்பத்தி செய்யப்படுகின்ற சில மாடல்களை தவிர பல்வேறு மாடல்கள் இறக்குமதி செய்யப்பட்டே விற்பனை செய்யப்படுகின்றது.
இந்தியாவில் உள்ள பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் சக்கன் ஆலையில் பஜாஜ் பைக்குகளை தவிர கேடிஎம் பைக்குகள், ஹஸ்க்வர்னா போன்றவை உற்பத்தி செய்யப்பட்டு வரும் நிலையில் அடுத்த சில மாதங்களுக்குள் இந்த கூட்டணி வாயிலாக ட்ரையம்ப் மோட்டார்சைக்கிள்களும் உற்பத்தி செய்யப்பட உள்ளது.
இந்த ஆண்டின் இறுதிக்குள் பஜாஜ் நிறுவனம் புதிய பல்சர் மற்றும் அவென்ஜர் மாடல்களை அறிமுகம் செய்ய உள்ள நிலையில், அடுத்த ஆண்டின் தொடக்க மாதங்களில் ஹஸ்க்வர்னா பிராண்டு மோட்டார்சைக்கிள் மாடல்கள் வெளிவரும் வாய்ப்புகள் உள்ளது.