HomeTIPSபுதிய கார்களில் கட்டாயம் வைத்திருக்க வேண்டிய ஆக்ஸசெரீஸ்..!

புதிய கார்களில் கட்டாயம் வைத்திருக்க வேண்டிய ஆக்ஸசெரீஸ்..!

ஆக்ஸசெரீஸ்

புதிதாக கார் வாங்குபவர்கள் கட்டாயம் ஒரு சில ஆக்ஸசெரீஸ்களை கூடுதலாக வாங்கி வைத்திருக்கும் நல்லதாகும் அடிப்படையாகவே இவைகள் சிறப்பான வகையில் கார்களை பராமரிக்க பெரிதும் உதவும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

தேவையற்ற ஆக்ஸசெரீஸ் தவிர்ப்பதும் அதே நேரத்தில் தேவையானவற்றை வாங்குவது என்பது ஒரு சிறந்த தேர்வாக அமையும்.

குறிப்பாக அவசியமற்ற சட்டத்திற்கு புறம்பான மாறுதல்கள் அதே நேரத்தில் கருமை நிறம் கொண்ட டார்க் சன் ஃபிலிம், கூடுதலான பம்பர், அவசியமற்ற வகையில் வயரிங் செய்து எல்இடி விளக்குகள் மற்றும் ஏர் ஹார்ன் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை தவிர்க்க வேண்டியது அவசியமான ஒன்றாகும்.

முதலில் முதல் உதவி பெட்டி கட்டாயம் அனைவரும் வைத்திருக்க வேண்டிய ஒரு முக்கிய அம்சமாகும்.

  • டயர் இன்ஃபிளேட்டர் (Tyre Inflator) கார்களில் இருக்க வேண்டிய முக்கியமான துனை கருவிகளில் ஒன்றாகும். பொதுவாக ட்யூப்லெஸ் டயர் பயன்படுத்தினாலும் சில நேரங்களில், இரவிலும் டயரில் காற்று நிரப்புவதில் சிரமத்தை எதிர்கொள்ள நேர்ந்தால் அவசியமாகின்றது.
  • பஞ்சர் ரீபேட் கிட் (Tubeless Tyre Puncher Repair kit) மிக குறைந்த நேரத்தில் சுயமாகவே ட்யூப்லெஸ் டயர்களில் பஞ்சரை நீக்கி பயணத்தை தொடர்ந்து மேற்கொள்ள உதவுகின்றது.
  • டேஸ்கேம் (Dashcam) என்பது தற்பொழுதைய சூழ்நிலைகளில் அவசியமான ஒன்றாகவும், அது நமக்கான மிகவும் சிறந்த பாதுகாப்பினை தரும் ஒன்றாக அமைந்திருக்கின்றது.
  • சிறிய குழந்தைகளுக்கான இருக்கை (Child seat) பயன்படுத்தும் பொழுது குழ்ந்தைகளின் பாதுகாப்பு மேலும் உறுதிப்படுத்தப்படுகின்றது.
  • ஜம்ப்ர் கேபிள் (Jump Starter Cable)வைத்திருந்தால் ஸ்டார்ட் செய்ய முடியாமல் பேட்டரி சிக்கலை எதிர்கொள்ளும் பொழுது மற்ற வாகனங்களின் உதவியுடன் ஜம்ப் ஸ்டார்ட் செய்யலாம்.
  • வேக்கம் க்ளீனர் (Vacuum Cleaner) வைத்திருப்பது காரின் இன்டீரியரை தூய்மையாக பராமரிக்க உதவும்.
  • தீயை அனைக்க உதவும் வகையிலான (Fire extinguisher) அவசியமானதாகும்.

இது தவிர பல்வேறு ஆக்ஸசெரீஸ்களில் சீட் பெல்ட் கட்டர், சன் ஷேட்,டஸ்ட் பின், மொபைல் போன் ஹோல்டர், கார் வாசிங் கிட், பாலீஷ் என பலவற்றை நம்முடைய தேவைக்கு ஏற்ப வாங்கிக் கொள்ளலாம்.

buy on amazon

இணைப்பு இணைப்புகளை இந்த பக்கம் கொண்டுள்ளது.. (This Article uses affiliate links which may earn a commission at no additional cost to you. As an Amazon Associate I earn from qualifying purchases.)

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular