சேமிப்பு என்பது மிக சிறப்பான கலை என்பதனை அனைவரும் அறிவோம். அந்த வகையில் எரிபொருளை சேமிக்க சிறப்பான சில எளிய வழிமுறைகளை தெரிந்து கொள்ளலாம்.
பெட்ரோல் , டீசல் விலை ஏறினாலும் இறங்கினாலும் சேமிக்க வேண்டியது மிக அவசியம்தானே..
உங்கள் வாகனம்
கார் அல்லது பைக் என எந்த வாகனமாக இருந்தாலும் சரி தயாரிப்பாளரின் பரிந்துரையை புறக்கணிக்காதீர்கள்.
1. முறையான பராமரிப்பு
தயாரிப்பாளரின் பரிந்துரையின்ப்படி வாகனங்களை அங்கிகரிக்கப்பட்ட டீலர்களிடம் சோதனை செய்யுங்கள். சரியான கால இடைவெளியில் என்ஜின் ஆயில் , காற்று ஃபில்டர் , ஏசி ஃபில்டர் மற்றும் எரிபொருள் ஃபில்டரை மாற்றுவது மிக அவசியம்.
2. டயர் பராமரிப்பு
டயர் அழுத்தம் சரியாக பராமரிக்க தவறினால் 3 சதவீதம் வரை எரிபொருள் இழப்பு ஏற்படும். தேய்மானத்திலும் கவனம் கொண்டு முறையான கால இடைவெளியில் டயர்களை மாற்றுங்கள். தயாரிப்பாளர் பரிந்துரைத்த டயர்களை மட்டுமே பயன்படுத்துங்கள்.
வாகனத்தின் எடுப்பான தோற்றத்துக்காக பொருத்தமில்லாத டயர்களை அறவே தவிர்த்துவிடுங்கள்.
டயர் வாங்குமுன் கவனிங்க
3. வாகனத்தின் எடை
தேவையற்ற பொருட்களை வாகனத்தில் இருந்து நீக்கிவிடுங்கள். அதிகப்படியான எடை ஏற்றப்படுவதனால் எரிபொருள் அதிகம் தேவைப்படும்.
4. எரிபொருள் தேர்வு
சரியான எரிபொருளினை தேர்வு செய்வது மிகவும் அவசியமாகும். தயாரிப்பாளரின் பரிந்துரை அடிப்படையில் எரிபொருள் தேர்வு செய்யுங்கள்.
வாகனம் ஓட்டும் முறை
வாகனத்தினை நாம் இயக்கும் முறையில்தான் எரிபொருள் சேமிப்பின் முக்கிய பங்கு உள்ளதே என்பது உங்களுக்கு தெரியுமா ?
1. ரேசிங் வேண்டாமே
நம்மில் பலர் எரிபொருளை இழக்கும் முதன்மையான காரணம் ஆகும். அதிக வேகத்தில் இயக்குவதனால் அடிக்கடி பிரேக்கிங் செய்யப்படுவதனால் இயல்பாகவே எரிபொருளை அதிகம் தேவைப்படும்.
2. கிளட்ச் எதற்க்கு ?
நெரிசல் மிகுந்த சாலைகளில் இயல்பாக கால் கிளட்சியில்தான் இருக்கும். முடிந்தவரை கிளட்ச் மேல் கியர் மாற்றும்பொழுது மட்டுமே பயன்படுத்துங்கள். கிளட்ச் மேல் கால் இருந்தாலும் தேய தேய எரிபொருள் தீரும் வேகத்தையும் இழப்பீர்கள்.
3. ஐடிலிங் குறையுங்கள்
வாகனம் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் இயக்கும்பொழுது சிக்னல் சமயங்களில் வாகனத்தினை அனைத்துவிடுவது மிகுந்த மைலேஜ் தரும்.
4. சரியான கியர்
சரியான வேகத்தில் சரியான கியரை பயன்படுத்தினால் எரிபொருள் எரியாமல் ஏற்படும் நாக்கிங் பிரச்சனையை தவிர்க்கலாம்.
5. நெரிசல் மிகுந்த சாலையில் ஏசி தேவையா ?
குறைவான வேகத்தில் இயங்கும் நெரிசல் மிகுந்த சாலைகளில் ஏசி இயக்குப்படுவதால் அதிகப்படியான எரிபொருளை செலவு செய்ய வேண்டி வரும்.
6. அவசியமற்ற பயணம்
குறைவான தூரத்திற்க்கு வாகனத்தினை பயன்படுத்தினால் எரிபொருள் அதிகம் செலவாகும். எவ்வாறு தெரியுமா குளிர்ந்த நிலையில் என்ஜின் குறைவான தூரத்திற்க்கு இயக்கும்பொழுது குறிப்பிட்ட வெப்பநிலை எட்டுவதற்க்கு அதிக எரிபொருளை எடுத்துக்கொள்ளும்.
7. ஜன்னல் மூடுங்க
நெடுஞ்சாலையில் மிகுந்த வேகத்தில் பயணிக்கும் பொழுது கிளாஸ்களை மூடுங்கள். ஏன் தெரியுமா ? ஏரோடைனமிக்ஸ் பாதிக்கப்படுவதனால் வாகனத்தினை வேகத்தையும் எரிபொருளையும் இழப்பீர்கள்.
8. மித வேகம் மிக நன்று
வாகனத்தினை 60 முதல் 70கிமீ வேகத்தில் இயக்கினால் தயாரிப்பாளரின் பரிந்துரைத்த மைலேஜ் தாராளமாக பெறமுடியும்.
9. சரியான நேரம்
பயணித்தினை முன்கூட்டியே திட்டமிட்டு தொடருங்கள் நெரிசல் மிகுந்த சாலைகளில் தவிர்த்திடுங்கள்.
மேலும் சில முக்கிய குறிப்புகள் படிக்க
பெட்ரோல் , டீசல் சேமிக்க 10 டிப்ஸ்
சிந்தெடிக் ஆயில் Vs மினரல் ஆயில்
என்ஜின் ஆயில் அவசியம் கவனிங்க
டயர் பராமரிப்பு டிப்ஸ்