மாருதி சுஸூகி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி கார் அமோக வரவேற்பினை பெற்றுள்ளதால் இரண்டாவது முறையாக உற்பத்தியை வருகின்ற ஜூலை மாதம் முதல் அதிகரிக்க உள்ளது. விட்டாரா பிரெஸ்ஸா கார் மொத்தம் 73,000 முன்பதிவுகளை பெற்றுள்ளது.
காம்பேக்ட் ரக எஸ்யூவி பிரிவில் விற்பனைக்கு வந்த மாருதி விட்டாரா பிரெஸ்ஸா காரில் 1.3 லிட்டர் மல்டிஜெட் இன்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 89 bhp மற்றும் இழுவைதிறன் 200 Nm ஆகும். இதில் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் இடம்பிடித்துள்ளது. மாருதி விட்டாரா பிரெஸ்ஸா மைலேஜ் லிட்டருக்கு 24.3 கிமீ ஆகும்.
கடந்த மார்ச் மாதம் விற்பனைக்கு வந்த விட்டாரா பிரெஸ்ஸா கார் ஏப்ரல் முதல் மே வரையிலான காலகட்டத்தில் 20,588 கார்கள் டெலிவரி செய்யப்பட்டுள்ளது. மேலும் 52,000 கார்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதால் காத்திருப்பு காலம் 6 மாதங்கள் வரை உள்ளது.
காத்திருப்பு காலத்தை குறைக்கவும் வாடிக்கையாளர்களுக்கு மிக விரைவாக டெலிவரி கொட்டுக்கும் நோக்கில் வருகின்ற ஜூலை மாதம் முதல் 10,000 கார்கள் மாதந்தோறும் உற்பத்தி செய்ய உள்ளது. கடந்த மே மாத இறுதியில் ஆண்டு உற்பத்தி 80,000 கார்கள் என்ற எண்ணிக்கையில் இருந்து 1,00,000 கார்கள் என அதிகரிக்கப்படது.
மேலும் பலேனோ காருக்கு காத்திருப்பு காலமும் அதிகமாக உள்ளதால் பலேனோ காரின் உற்பத்தியை அதிகரிக்க உள்ளது. மாருதி சுசூகி நிறுவனத்தின் ஆல்ட்டோ , டிசையர் , ஸ்விஃப்ட் கார்கள் விற்பனை சற்று இறக்கத்தை சந்தித்துள்ளது.
maruti vitara brezza photo gallery
[envira-gallery id=”5777″]