Categories: Auto News

யெஸ்டி அட்வென்ச்சர் பைக்கை விற்பனைக்கு வெளியிடுகிறதா.?

3ca32 roadking yezdi

மஹிந்திரா நிறுவனத்தின் கீழ் செயல்படும் கிளாசிக் லெஜென்ட்ஸ் பிராண்டுகளில் ஒன்றான யெஸ்டி மோட்டார்சைக்கிள் பிராண்டில் முதல் அட்வென்ச்சர் ரக பைக்கினை அடுத்த சில வாரங்களில் விற்பனைக்கு வெளியிடுவது உறுதியாகியுள்ளது.

சில மாதங்களுக்கு முன்னரே சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டு வந்த அட்வென்ச்சர் ரக மாடல் உற்பத்தி நிலையை எட்டியுள்ளதால் விற்பனைக்கு வெளியிடுவதனை உறுதி செய்யும் வகையில் சமூகவலை தள பக்கங்களில் டீசர் வெளியிட்டுள்ளது.

ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் பைக்கிற்கு போட்டியாக வரவுள்ள யெஸ்டி அட்வென்ச்சர் மாடலில் ஜாவா பைக்குகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்ற 334 சிசி என்ஜின் பொருத்தப்பட உள்ளது. இந்த என்ஜின் அதிகபட்சமாக 31 ஹெச்பி பவர் மற்றும் 31 என்எம் டார்க் வெளிப்படுத்துகிறது. இதில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

அடுத்த சில நாட்களில் யெஸ்டி பைக் அறிமுகம் குறித்தான முக்கிய தகவல்கள் வெளியாகலாம்.