கடந்த 2008 ஆம் ஆண்டு இந்திய சந்தையில் 150cc பிரிவில் வெளியான முதல் லிக்யூடூ கூல்டூ எஞ்சின் பெற்ற யமஹா R15 மாடல் தொடர்ந்து ஃபேரிங் ஸ்டைல் பெற்ற ஸ்போர்ட்டிவ் பைக் சந்தையில் மிக முக்கியமான மாடலாக விளங்குகிறது.
சர்ஜாப்பூர் ஆலையில் தயாரிக்கப்டுகின்ற யமஹாவின் ஆர்15 பைக்கின் உற்பத்தி இலக்கு 10 லட்சத்தை கடந்துள்ள நிலையில், இந்த ஆலையில் உற்பத்தி செய்யப்பட்ட 90 % ஆர்15 பைக்குகள் இந்தியாவிலே விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் பேசிய இந்தியா யமஹா மோட்டார் குழும நிறுவனங்களின் தலைவர் திரு. இடரு ஒட்டானி, “எங்கள் வாடிக்கையாளர்களின் அசைக்க முடியாத நம்பிக்கைக்கும், இந்த மைல்கல்லை அடைவதற்கு முக்கிய காரணமாக இருந்த எங்கள் ஊழியர்களின் அர்ப்பணிப்புக்கும் நாங்கள் எங்கள் மகத்தான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்றார்.
LC4V 155cc, லிக்யூடு கூல்டு SOHC நான்கு வால்வு, சிங்கிள் சிலிண்டர் VVA பெற்ற என்ஜின் 10000rpm-ல் 18.1 bhp பவர் மற்றும் 7,500rpm-ல் 14.2Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த மாடலில் சிலிப்பர் அசிஸ்ட் உடன் கூடிய 6 வேக கியர்பாக்ஸ் பெற்றுள்ளது.
2025 யமஹா R15 V4 பைக்கின் விலை ரூ.1.85 லட்சம் முதல் ரூ.2.02 லட்சம் வரை தமிழ்நாடு எக்ஸ்ஷோரூம் விலை அமைந்துள்ளது.