இந்திய யுட்டிலிட்டி ரக சந்தையில் முன்னணி வகித்து வரும் மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் க்ரெட்டா ,விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி மாடல்களின் வரவுக்கு பின்னர் சற்று தளர்ந்துள்ள மஹிந்திராவின் சந்தையை புதுப்பிக்க புதிய எஸ்யூவி மாடலை S201 என்ற பெயரில் தயாரிக்க உள்ளது.
மஹிந்திரா எஸ்யூவி
வருகின்ற 2017-2018 ம் நிதி வருடத்தில் இரண்டு புதிய மாடல்களை மஹிந்திரா விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. அவற்றில் ஒன்று U321 எம்பிவி ரக மாடலும் மற்றொன்று புதிதாக உருவாக்கப்பட உள்ள S201 என்ற பெயரிலான எஸ்யூவி மாடலும் ஒன்றாகும். இது தவிர மஹிந்திரா தார் எஸ்யூவி காரினை மேம்படுத்தி டிசைன் அம்சங்களில் மாற்றங்களை கொண்டு வரவும் திட்டமிட்டுள்ளது.
மஹிந்திரா U321
சமீபத்தில் சென்னை பகுதியில் சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டு வரும் இன்னோவா க்ரீஸ்ட்டா காருக்கு எதிராக நிலை நிறுத்தப்பட உள்ள புதிய U321 (code-name) ரக எம்பிவி காருக்கு ரூ. 1500 கோடி முதலீட்டில் ஆலை விரிவாக்க பணிகளை நாசிக் ஆலையில் மஹிந்திரா மேற்கொண்டுள்ளது. இந்த எம்பிவி ரக கார் மாடலானது அமெரிக்காவின் மஹிந்திரா தொழில்நுட்ப (Mahindra’s North American Technical Centre – MNATC) பிரிவினால் முதல் மாடலாகும். சமீபத்தில் இந்த காரின் சோதனூ ஓட்ட பங்கள் இணையத்தில் வெளியாகிருந்தது.
மஹிந்திரா S201
விட்டரா பிரெஸ்ஸா , க்ரெட்டா ,டஸ்ட்டர் போன்ற மாடல்களுக்கு நேரடி சவலாக ஏற்படுத்தும் வகையிலான மாடலாக தயாரிக்கப்பட உள்ள S201 (code-name) மாடல் ஆனது மஹிந்திரா குழுமத்தின் அங்கமாக விளங்குகின்ற சாங்யாங் நிறுவத்தின் டிவோலி எஸ்யூவி காரின் பிளாட்பாரத்தில் மஹிந்திரா ,சாங்யாங் மற்றும் பினின்ஃபாரீனா கூட்டு டிசைன் வடிவம்சங்களை கொண்டதாக இந்த மாடல் விளங்கும்.
மஹிந்திரா தார்
ஆஃப்ரோடு சாகசங்களுக்கு ஏற்ற மஹிந்திரா தார் எஸ்யூவி காரின் வடிவம் மற்றும் இன்டிரிநர் போன்றவற்றில் பல்வேறு மாற்றங்களை செய்ய மஹிந்திரா திட்டமிட்டுள்ளது.
வரவுள்ள மஹிந்திராவின் அனைத்து புதிய எஸ்யூவி , கார்கள் மற்றும் எம்பிவி ரகங்கள் அனைத்துமே இனி மஹிந்திரா ,சாங்யாங் மற்றும் பினின்ஃபாரீனா கூட்டணியில் உருவாக்கப்படும் டிசைன் மற்றும் வசதிகளையே பெற்று மிக நவீனத்துவமாக விளங்கும் என பவன் குன்கா தெரிவித்துள்ளார். பிரபலமான இத்தாலி டிசைன் நிறுவனமாக செயல்படும் பினின்ஃபாரீனா மஹிந்திரா வசம் உள்ளது.