2024 ஆம் ஆண்டில் புதிய எலக்ட்ரிக் வாகனங்களை இரு சக்கர வாகன சந்தையில் வெளியிடுவதுடன் மூன்று சக்கர மாடல் ஒன்றையும் தயாரித்து வருவதாக டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
தற்பொழுது டிவிஎஸ் மோட்டார் ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மற்றும் 11 kw பவரை வெளிப்படுத்தும் எக்ஸ் என்ற இரு பேட்டரி மின்சார ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகின்றது.
TVS Motor Electric 2W
டிவிஎஸ் ஐக்யூப் ஸ்கூட்டருக்கு வரவேற்பு தொடர்ந்து அதிகரித்து வருவதனால் உற்பத்தியை 25,000 எண்ணிக்கையாக உயர்த்த திட்டமிட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் மற்றும் புதிய எக்ஸ் ஆகிய இரண்டையும் ஐரோப்பா சந்தைக்கு ஏற்றுமதி செய்யவும் திட்டமிட்டுள்ளது.
அடுத்த ஆண்டில் 5 முதல் 25 KW வரம்பில் தொடர்ச்சியான புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம்” என்று டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான கே.என் ராதாகிருஷ்ணன் பி.டி.ஐ செய்தி முகமைக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பல்வேறு மாறுபட்ட செயல்திறன், குறைந்த விலை முதல் அதிகபட்ச வசதிகள் கொண்ட மாடலுக்கு என மாறுபட்ட விலை பட்டியலில் எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை கொண்டு வரவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதுதவிர, எலக்ட்ரிக் மூன்று சக்கர ஆட்டோ ஒன்றை விற்பனைக்கு வெளியிட திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டுளளார். சமீபத்தில் பயணிகளுக்கு எலக்ட்ரிக் ஆட்டோ ரிக்ஷா மாடலின் வடிவமைப்புக்கு காப்புரிமை டிவிஎஸ் பெற்றிருக்கின்றது.
இதன் மூலம் குறைந்த விலை டிவிஎஸ் ஐக்யூப் மற்றும் ஐக்யூப் ST என இரண்டு மாடலும், புதிய எலக்ட்ரிக் ஸ்போர்ட்டிவ் ஸ்கூட்டர் அல்லது பைக் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புகள் உள்ளது.
தற்பொழுது 400 இடங்களில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை செய்யப்பட்டு வரும் நாளில் இந்த எண்ணிக்கையை அதிகரிக்கவும், பல்வேறு புதிய தயாரிப்புகளை அடுத்த இரண்டு முதல் மூன்று காலண்டிற்குள் வெளியிட டிவிஎஸ் மோட்டார் திட்டமிட்டுள்ளது.