டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் புதிய மூன்று சக்கர ஆட்டோ ரிக்ஷா மாடலை கிங் டூரோ மேக்ஸ் பிளஸ் சிஎன்ஜி மற்றும் பெட்ரோல் என இரண்டிலும் விற்பனைக்கு வெளியானது. கிங் டூரோ மேக்ஸ் மாடலில் 225cc என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
டிவிஎஸ் கிங் டூரோ மேக்ஸ் பிளஸ் விலை ரூ. 257,190 (CNG) மற்றும் ரூ. 235,552 (பெட்ரோல்) எக்ஸ்-ஷோரூம், பெங்களூரு அறிவிக்கப்பட்டுள்ளது.
TVS King Duramax Plus
கிங் டூரோ மேக்ஸ் பிளஸ் மூன்று ஆட்டோ ரிக்ஷாவில் 225cc 4 ஸ்ட்ரோக் லிக்யூடு கூல்டு சிங்கிள் சிலிண்டர் SI இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது, பெட்ரோல் வேரியண்டில் 4,750 rpm-ல் 10.59 hp மற்றும் சிஎன்ஜி 5,000 rpm-ல் 8.98 hp அதிகபட்ச பவர் வெளிப்படுத்துகிறது.
விசாலமான கேபினில் மூன்று பயணிகள் வசதியாக அமைந்திருக்கின்றது. டியூப்லெஸ் டயர்ள கூடுதல் வசதி மற்றும் டிரைவர்கள் மற்றும் பயணிகளுக்கு பாதுகாப்பு உறுதியான கட்டுமானத்தை கொண்டுள்ளது. இந்த ஆட்டோ ரிக்ஷா எல்இடி ஹெட்லேம்ப் உடன் வருகிறது,
டிவிஎஸ் மோட்டார் வணிகத் தலைவர் ரஜத் குப்தா பேசுகையில், “டிவிஎஸ் மோட்டார் புதுமை மற்றும் வாடிக்கையாளர்களை மையமாக கொண்ட சலுகைகளில் தொடர்ந்து முன்னணியில் உள்ளது.