டொயோட்டா நிறுவனம் தனது டைசோர் கிராஸ்ஓவர் எஸ்யூவி காரில் பண்டிகை காலத்தை முன்னிட்டு சிறப்பு லிமிடெட் எடிசன் என்ற பெயரில் கூடுதல் ஆக்செரீஸ் சேர்க்கப்பட்ட மாடல் விற்பனைக்கு ரூ.10.56 லட்சம் முதல் ரூ.12.88 லட்சம் வரை விலையில் கொண்டு வந்திருக்கின்றது.
இந்த பண்டிகை கால எடிசன் ஆனது 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எடிசனில் 5 வேக மேனுவல் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டதாக மட்டும் அறியப்படுகின்றது.
இந்த சிறப்பு எடிசனில் வெளிப்புறத்தில் அண்டர்பாடி ஸ்பாய்லர்கள் கிரானைட் கிரே மற்றும் சிவப்பு நிற கலவையுடனும் டோர் சில் கார்ட்ஸ், குரோம் கார்னிஷ் ஆனது ஹெட் லைட் மற்றும் கிரில் பகுதியில் சைடு மோல்டிங்கிலும் கொடுக்கப்பட்டிருக்கின்றது. இன்டீரியரில் டோர் வைசர் மற்றும் அனைத்து கால சூழ்நிலைகளுக்கும் ஏற்ற 3d மேட்ஸ், டோர் லேம்ப் போன்றவை உள்ளன. சிறப்பு பதிப்பு ஆக்சஸெரீஸ் விலை மதிப்பு ரூ. 20,160/-, ஆகும்.
சமீபத்தில் ஹைரைடர் லிமிடெட் எடிசன் விற்பனைக்கு வெளியானது