இந்தியாவின் முன்னணி மோட்டார் வாகன தயாரிப்பாளரான டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பயணிகள் கார் பிரிவின் கீழ் விற்பனை செய்யப்படுகின்ற மாடல்கள் விலை ரூ.40,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது.
அதிகரித்து வரும் உற்பத்தி மற்றும் மூலப் பொருட்களின் விலை உயர்வு மற்றும் மாறிவரும் அன்னிய செலாவனி ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்நிறுவனத்தின் டியாகோ, டீகோர், ஹெக்ஸா, நெக்ஸான், போல்ட், ஜெஸ்ட் உள்ளிட்ட அனைத்து மாடல்களின் விலையும் அதிகபட்சமாக ரூ.40,000 வரை உயர்த்தப்படுகின்றது.
சமீபத்தில் மாருதி, ஃபோர்டு, பிஎம்டபிள்யூ மற்றும் ரெனோ உள்ளிட்ட நிறுவனங்கள் உயர்த்தியுள்ளது.