டாடா மோட்டார்சின் பயணிகள் வாகனங்கள் பிரிவில் உள்ள ICE மற்றும் EV மாடல்களுக்கு அதிகபட்சமாக ரூ.1.50 லட்சம் வரை தள்ளுபடியை ஏப்ரல் 30,2025 வரை செயல்படுத்த உள்ளது. கீழே வழங்கப்பட்டுள்ள சலுகைகள் மாடல் கையிருப்பு டீலர்களை பொறுத்து மாறுபடலாம்.
MY2024 Tata cars offers
குறிப்பாக டாடாவின் பெர்ஃபாமென்ஸ் ஹேட்ச்பேக் மாடலான அல்ட்ரோஸ் ரேசருக்கு அதிகபட்ச சலுகையை MY2024 மாடலுக்கு ரொக்க தள்ளுபடி 85,000 வரை வழங்கி கூடுதலாக எக்ஸ்சேஞ்ச், லாயல்டி போனஸ் போன்ற சலுகைகளை மூலம் ரூ.1,50,000 வரை வழங்குகின்றது.
ஹாரியர் மற்றும் சஃபாரி மாடல்களுக்கு MY2024 தயாரிப்பு மாடல் என்றால் ரூ.50,000 வரை ரொக்க தள்ளுபடியுடன் கூடுதலாக எக்ஸ்சேஞ்ச், லாயல்டி போனஸ் போன்ற சலுகைகளை என ஒட்டுமொத்தமாக ரூ.1,00,000 வரை வழங்குகின்றது.
மேலும் MY2024 தயாரிப்பு பஞ்ச், நெக்ஸான் போன்றவை கையிருப்பில் இருந்தால் ரூ.50,000 வரை கிடைக்கும். கூடுதலாக டாடா டியாகோ காருக்கு ரூ.20,000 மற்றும் டிகோருக்கு 30,000 வரை வழங்கப்பட உள்ளது. கர்வ் மாடலுக்கு ரூ.30,000 கிடைக்கலாம்.
MY2025 Model Tata car Offers
ஹாரியர் மற்றும் சஃபாரி மாடலுக்கு ரூ.50,000 வரை கிடைத்தாலும் ரொக்க தள்ளுபடி ரூ.25,000 மற்றும் எக்ஸ்சேஞ் அல்லது ஸ்கிராப் மூலம் ரூ.25,000 கூடுதலாக கிடைக்கும்.
நெக்ஸான் மாடலுக்கு ரொக்க தள்ளுபடி இல்லை, ஆனால் எக்ஸ்சேஞ் அல்லது ஸ்கிராப் மூலம் ரூ.15,000 கிடைக்கும்.
டாடா டிகோர், டியாகோ, அல்ட்ரோஸ், பஞ்ச் உள்ளிட்ட மாடல்களுக்கு ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை ரொக்க தள்ளுபடி, எக்ஸ்சேஞ் அல்லது ஸ்கிராப் மூலம் ரூ.15,000- ரூ.25,000 கூடுதலாக வழங்கப்பட உள்ளது.
MY2024 TATA EV offers
MY24ல் தயாரிக்ககப்பட்ட டாடாவின் மின்சார கார்கள் கையிருப்பில் இருக்கும் பட்சத்தில் டியாகோ இவி மாடலுக்கு ரூ.85,000 வரையும், கர்வ் இவி மாடலுக்கு ரூ.70,000 வரை கிடைக்கும். இதில் ரூ.20,000 எக்ஸ்சேஞ் அல்லது ஸ்கிராப் மூலம் பெற முடியும்.
பஞ்ச்.இவி மற்றும் நெக்ஸான்.இவி மாடலுக்கு முறையே ரூ.70,000 முதல் ரூ.40,000 வரை கிடைக்கும்.
MY2025ல் தயாரிக்கப்பட்ட டியாகோ.இவி, பஞ்ச்.இவி மற்றும் நெக்ஸான்.இவி போன்றவற்றுக்கு ரூ.10,000 முதல் ரூ.30,000 வரை எக்ஸ்சேஞ் அல்லது ஸ்கிராப் போனஸ் கிடைக்கலாம், மற்றபடி ரொக்க தள்ளுபடி இல்லை.
கொடுக்கப்பட்டுள்ள தள்ளுபடி சலுகை டீலர்களை பொறுத்து மாறுபடும், எனவே மேலும் விபரங்களுக்கு அருகாமையில் உள்ள டாடா மோட்டார்ஸ் டீலரை தொடர்பு கொள்ளுங்கள்.