தமிழகத்தில் தற்காலிகமாக டூவீலர் வாகனப் பதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஆர்.டி.ஓ வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. முறையான பி.எஸ் 4 எஞ்சின் விபரங்களை வழங்காத ஹீரோ, டிவிஎஸ் மற்றும் யமஹா பதிவு மாநிலம் முழுவதும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
டூவீலர் வாகனப் பதிவு நிறுத்தம்
- ஏப்ரல் 1ந் தேதி முதல் பி.எஸ்4 வாகனங்கள் மட்டுமே விற்பனை மற்றும் பதிவுசெய்ய இயலும்.
- மதுரை மற்றும் கோயம்புத்தூர் ஆர்டிஓ மையங்களில் அனைத்து இரு சக்கர வாகன பதிவும் நிறுத்தப்பட்டுள்ளது.
- ஹீரோ, டிவிஎஸ் மற்றும் யமஹா போன்ற நிறுவனங்களின் பதிவு முற்றிலுமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 1ந் தேதி முதல் நாடு முழுவதும் பி.எஸ் 3 வாகனங்கள் விற்பனை செய்யக்கூடாது என அதிரடியாக உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததை தொடர்ந்து பி.எஸ் 3 வாகனங்கள் உற்பத்தியை முழுமையாக நிறுத்திவிட்டு வாகனங்கள் பி.எஸ் 4 மாசு விதிகளுக்கு ஏற்ற எஞ்சினை தயாரித்து வருகின்றது.
தமிழக வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் சமர்பிக்க வேண்டிய பி.எஸ்.4 எஞ்சின் பொருத்தப்பட்ட ஆவணங்களை சரிவர சமர்பிக்காத காரணத்தால் யமஹா, ஹீரோ, டிவிஎஸ் நிறுவனங்களின் இருசக்கர வாகனங்கள் பதிவு செய்வதில் சிக்கல் எழுந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், தமிழக முழுவதும் உள்ள அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களும் தற்காலிமாக ஹீரோ, டிவிஎஸ் மற்றும் யமஹா போன்ற நிறுவனங்களின் இரு சக்கர வாகன பதிவினை நிறுத்தி வைத்துள்ளது. மேலும் மதுரை மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் எந்த நிறுவனங்களின் இருசக்கர வாகனங்களும் பதிவு செய்யப்படுவதில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றது.
ஆனால் பஜாஜ் மற்றும் ஹோண்டா நிறுவனங்களின் பி.எஸ்.4 எஞ்சின் பொருத்தப்பட்ட வாகனங்கள் தொடர்பான ஆவணங்களை முறையாக சமர்ப்பித்துள்ளால் இரு நிறுவனங்களின் வாகனங்களை பதிவு செய்வதில் எந்த சிக்கலும் ஏற்படவில்லை.
பி.எஸ்4 எஞ்சின் பொருத்தப்பட்ட வாகனங்கள், சென்னை மாநகரத்தில் யமஹா, டி.வி.எஸ், ஹீரோ போன்ற நிறுவனங்களின் ஒரு வாகனம் கூட பதிவு செய்யப்படவில்லை , எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
அடுத்த சில நாட்களில் இந்த நிறுவனங்கள் பி.எஸ் 4 தொடர்பான ஆவனங்களை முழுமையாக சமர்பிக்க உள்ளதால் சில நாட்களுக்குள் மீண்டும் வாகனப் பதிவு தொடரும் என நம்பதகுந்த வாட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Via -et auto