இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சாலை விபத்துகளில் வாகனத்தினை பாதுகாக்கவும், எடுப்பான தோற்றத்தை வெளிப்படுத்தும் க்ராஷ் கார்டுகள் மற்றும் கூடுதல் பம்பர்களை பயன்படுத்தக்கூடாது என மத்திய நெடுஞ்சாலைகள் மற்றும் சாலை போக்குவரத்து அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
க்ராஷ் கார்டுகள்
ஒவ்வொரு வாகனம் வடிவமைக்கும்போது பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு எதிர்பாராத மோதல் சமயங்களில் அதிகபட்ச பாதுகாப்பினை வழங்கும் வகையிலும், காற்றுப்பை உட்பட பாதுகாப்பு சார்ந்த அம்சங்கள் இயங்குவதற்கு வழி வகுக்கின்றது.
வாகனங்களில் பொருத்தப்படுகின்ற புல் பார்கள் மற்றும் க்ராஷ் கார்டுகள் ஏர்பேக் சென்சார் செயற்படுவதுற்கு சிக்கலை ஏற்படுத்துவனதால் க்ராஷ் கார்டுகள் மற்றும் கூடுதல் பம்பர்கள் ஆகியவற்றை கார்கள், எஸ்யூவி, கனரக வாகனங்கள் உட்பட இரு சக்கர வாகனங்களிலும் பொருத்துவதற்கு 1988 மோட்டார் வாகன சட்ட பிரிவு 52 விதிகளுக்கு உட்பட்டு விதி மீறலாக கருதப்படும் என அரசு குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுபோன்ற பம்பர்களால் பாதாசாரிகள் மிக கடுமையான சிரமத்துக்கு உள்ளாவதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே,வரும் காலங்களில் இதுபோன்ற பம்பர்களை பொருத்தும் வாகன உரிமையாளர்களுக்கு ரூ.250 முதல் ரூ.2,000 வரை அபராதம் வசூலிக்கப்படும்.