அசோக் லேலண்ட் நிறுவனத்தின் கீழ் செயல்படும் சுவிட்ச் மொபைலிட்டி இவி நிறுவனம், விற்பனையில் உள்ள தோஸ்த் அடிப்படையில் சுவிட்ச் IeV3 மற்றும் IeV4 என இரண்டு இலகுரக எலக்ட்ரிக் வர்த்தக வாகனங்களை (LeCV) அறிமுகம் செய்துள்ளது.
இலகுரக எலக்ட்ரிக் வாகனங்களை வர்த்தக பயன்பாட்டிற்கு தயாரிக்க சுவிட்ச் நிறுவனம், IeV பிளாட்ஃபாரத்திற்கு ரூ.100 கோடி முதலீட்டை மேற்கொண்டுள்ளது. புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட இரண்டு மாடல்களும் விலை ஜனவரி 2024-ல் அறிவிக்கப்பட உள்ளது.
Switch IeV3 & IeV4
2-3.5T பிரிவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள மாடலில் அதிகபட்சமாக IeV3 1.2 டன் வரையிலான சுமை தாங்கும் திறன் கொண்டுள்ளது. இந்த மாடலில் 25.6kwh LFP பேட்டரி பொருத்தப்பட்டு 40kw பவர், மற்றும் 190Nm டார்க் வெளிபடுத்துகின்றது. முழுமையான சிங்கிள் சார்ஜில் எவ்விதமான வர்த்தக பயன்பாடுகளுக்கும் 120 கிலோ மீட்டர் ரேஞ்சு வழங்கும். இந்த மாடலின் டாப் ஸ்பீடு 70 கிமீ ஆக உள்ளது.
IeV4 மாடல் கார்கோ பாடி நீளம் 8.6 ft , அகலம் 5.3 ft மற்றும் உயரம் 1.4 ft கொண்டு, GVW மொத்த எடை 2590 கிலோ ஆகும்.
அடுத்து, IeV4 1.7 டன் வரையிலான சுமை தாங்கும் திறன் பெற்ற மாடல் 32.2kwh LFP பேட்டரி பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 60Kw பவரை வழங்குவதுடன் முழுமையான சிங்கிள் சார்ஜில் எவ்விதமான வர்த்தக பயன்பாடுகளுக்கும் 120 கிலோ மீட்டர் ரேஞ்சு வழங்கும் என உறுதிப்படுத்தியுள்ளது. இந்த மாடலின் டாப் ஸ்பீடு 80 கிமீ ஆக உள்ளது.
IeV4 மாடல் கார்கோ பாடி நீளம் 9.7 ft , அகலம் 5.7 ft மற்றும் உயரம் 1.6 ft கொண்டு, GVW மொத்த எடை 3490 கிலோ ஆகும்.
விரைவு சார்ஜிங் ஆப்ஷனை பெற்றுள்ள மாடல் ஒரு மணி நேரத்திற்க்கும் குறைவான நேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்ய இயலும் எனெபதனால் ஒரு நாளுக்குள் 300 கிமீ வரையிலான பல தரபட்ட பயன்பாடுகளுக்கு ஏற்றதாக விளங்கும் என இந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
Switch iON கனெக்ட்டிவிட்டி சார்ந்த அம்சங்களை பெறுகின்ற இந்த டிரக்குகள் வாகனத்தின் நிலை, வழித்தடங்கள், பயண வரலாறு என 20க்கு மேற்பட்ட அம்சங்களை கொண்டுள்ளது.
அசோக் லேலண்ட் நிறுவனம் 75 ஆம் ஆண்டு விழா கொண்டாட்டத்தை இன்றைக்கு கொண்டாடி வரும் நிலையில், சுவிட்ச் எலக்ட்ரிக் டிரக் மட்டுமல்லாமல்,NTPC க்காக தயாரிக்கப்பட்ட அசோக் லேலண்டின் ஹைட்ரஜன் ஃப்யூவல் செல் பஸ் இன்றைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.