சிறிய கார் சந்தையில் 1975 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் போலோ வெற்றிகரமாக 50 ஆண்டுகளை கடந்து சுமார் 2 கோடி வாகனங்களின் விற்பனை எண்ணிக்கை கடந்துள்ளது. தொடர்ந்த தற்பொழுது 6 வது தலைமுறை போலோ விற்பனையில் கிடைத்து வருகின்றது.
1970களில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் பீட்டல் காருக்கான மாற்றாக பாஸாட் கார் 1973 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட நிலையில் 1974ல் கோல்ஃப் காரை வெளியிட்ட இந்நிறுவனம் 1975ல் சிறிய ரக கார் சந்தைக்கான எந்த மாடலும் இல்லாத காலத்தில் போலோ காரை 1975 ஆம் ஆண்டு வெளியிட்டது.
மார்ச் 1975ல் வழங்கப்பட்ட சிறிய கார் ஆடி 50 மாடலை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட சிறிது மாற்றியமைக்கப்பட்ட வடிவத்தில் ஃவோக்ஸ்வேகன் போலோ கார் வொல்ஃப்ஸ்பர்க்கில் உள்ள ஆலையில் உற்பத்தி துவங்கப்பட்டது.
போலோ தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளுக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் ஏற்ற குறைந்த விலையில் மொபிலிட்டி சந்தைக்கு ஏற்ற அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் நியாயமான விலை, சிறப்பான செயல்திறன் விகிதத்துடன், போலோ தலைமுறை தலைமுறையாக தனித்துவான பங்களிப்பினை கொண்டுள்ளது.
முதல் ஓட்டுநர் பயிற்சிக்காகவோ, ஸ்போர்ட்டி டிரைவிங் அனுபவம் அல்லது குடும்பக் காராகவோ – போலோ நினைவுகளை உருவாக்கி, எதிர்காலத்திலும் பல்துறை துணையாகத் தொடரும் என ஃபோக்ஸ்வேகன் குறிப்பிட்டுள்ளது.
50 ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு 1975 ஆம் ஆண்டின் ஓசியானிக் ப்ளூ போலோ L மற்றும் 1977ல் வெளியான தனித்துவமான hill climb போலோ என இரண்டும் காட்சிக்கு ஜனவரி 31 முதல் பிப்ரவரி 2, 2025 வரை நடைபெற உள்ள ப்ரெமென் கிளாசிக் மோட்டார் அரங்கில் காட்சிப்படுத்த உள்ளது.