சிறிய கார் சந்தையில் 1975 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் போலோ வெற்றிகரமாக 50 ஆண்டுகளை கடந்து சுமார் 2 கோடி வாகனங்களின் விற்பனை எண்ணிக்கை கடந்துள்ளது. தொடர்ந்த தற்பொழுது 6 வது தலைமுறை போலோ விற்பனையில் கிடைத்து வருகின்றது.
போலோ துவக்க வரலாறு
1970களில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் பீட்டல் காருக்கான மாற்றாக பாஸாட் கார் 1973 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட நிலையில் 1974ல் கோல்ஃப் காரை வெளியிட்ட இந்நிறுவனம் 1975ல் சிறிய ரக கார் சந்தைக்கான எந்த மாடலும் இல்லாத காலத்தில் போலோ காரை 1975 ஆம் ஆண்டு வெளியிட்டது.
மார்ச் 1975ல் வழங்கப்பட்ட சிறிய கார் ஆடி 50 மாடலை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட சிறிது மாற்றியமைக்கப்பட்ட வடிவத்தில் ஃவோக்ஸ்வேகன் போலோ கார் வொல்ஃப்ஸ்பர்க்கில் உள்ள ஆலையில் உற்பத்தி துவங்கப்பட்டது.
போலோ தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளுக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் ஏற்ற குறைந்த விலையில் மொபிலிட்டி சந்தைக்கு ஏற்ற அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் நியாயமான விலை, சிறப்பான செயல்திறன் விகிதத்துடன், போலோ தலைமுறை தலைமுறையாக தனித்துவான பங்களிப்பினை கொண்டுள்ளது.
முதல் ஓட்டுநர் பயிற்சிக்காகவோ, ஸ்போர்ட்டி டிரைவிங் அனுபவம் அல்லது குடும்பக் காராகவோ – போலோ நினைவுகளை உருவாக்கி, எதிர்காலத்திலும் பல்துறை துணையாகத் தொடரும் என ஃபோக்ஸ்வேகன் குறிப்பிட்டுள்ளது.
போலோ காரின் தலைமுறை மற்றும் சிறப்பு எடிசன்கள்
- 1975 முதல் 1981 ஆம் ஆண்டு வரை முதல் தலைமுறை போலோ விற்பனை செய்யப்பட்டது.
- 1981 முதல் 1994 வரை விற்பனை செய்யப்பட்ட இரண்டாம் தலைமுறை போலோ பல்வேறு மாற்றங்களை பெற்று கூடுதல் இடவசதி மற்றும் புதிய எஞ்சினை பெற்றிருந்தது.
- 1987 ஆம் ஆண்டு சிறப்பு போலோ Coupé GT G40 எடிசன் வெளியானது.
- 1994-2001 வரை விற்பனை செய்யப்பட்ட மூன்றாம் தலைமுறையில் முதன்முறையாக ஏர்பேக் வழங்கப்பட்டு பாதுகாப்பு மேம்படுத்தப்பட்டிருந்தது.
- இதற்கிடையில் 1998 ஆம் ஆண்டு முதன்முறையாக போலோ GTI அறிமுகம் செய்யப்பட்டது.
- 2001-2009 வரை விற்பனை செய்யப்பட்ட நான்காவது தலைமுறையில் முன் மற்றும் பக்கவாட்டில் ஏர்பேக்குகளுடன் கூடுதலாக பவர் ஸ்டீயரிங் மற்றும் ஏபிஎஸ் உடன் அறிமுகம் செய்யப்பட்டது.
- 2009-2017 வரை வெளியிடப்பட்ட ஐந்தாம் தலைமுறையில் இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் உதவி அமைப்புகள் சேர்க்கப்பட்டிருந்தது.
- ஐந்தாம் தலைமுறையில் கூடுதலாக வெளியான Polo R WRC மாடலின் மூலம் World Rally Championship பட்டத்தை 2013-2016 வரை தொடர்ந்து நான்கு ஆண்டுகளில் வென்றது.
- 2017ல் வெளியான 6வது தலைமுறை மிகவும் உயர்தர பாதுகாப்புடன் நவீன வசதிகளுடன் modular transverse matrix (MQB) பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட்டு தொடர்ந்து விற்பனை செய்யப்படுகின்றது.
- இந்தியாவில் போலோ காரின் விற்பனை 2010 முதல் 2022 வரை விற்பனை செய்யப்பட்டது.
50 ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு 1975 ஆம் ஆண்டின் ஓசியானிக் ப்ளூ போலோ L மற்றும் 1977ல் வெளியான தனித்துவமான hill climb போலோ என இரண்டும் காட்சிக்கு ஜனவரி 31 முதல் பிப்ரவரி 2, 2025 வரை நடைபெற உள்ள ப்ரெமென் கிளாசிக் மோட்டார் அரங்கில் காட்சிப்படுத்த உள்ளது.