ஆட்டோமொபைல் வரலாற்றில் அடுத்த தலைமுறை மாற்றத்துக்கு ஏற்ற நுட்பமாக விளங்க உள்ள மின்சார கார்களுக்கு பல்வேறு புதிய நுட்பங்களை உருவாகி வருகின்ற நிலையில் குவால்காம் நிறுவனம் எலக்ட்ரிக் சாலையை அறிமுகப்படுத்தியுள்ளது.
குவால்காம் எலக்ட்ரிக் சாலை
பிரசத்தி பெற்ற குவால்காம் நிறுவனம் எதிர்கால பேட்டரி வாகனங்களுக்கு சாலையின் வாயிலாகவே சார்ஜ் செய்யும் முறையை கொண்டு வரும் நோக்கில் டைனமிக் சார்ஜிங் தொழில்நுட்பம் ஒன்றை உருவாக்கியுள்ளது.
Dynamic Electric Vehicle Charging Technology (DECV) எனப்படுகின்ற மாறும் மின்சார வாகனங்களை சார்ஜிங் செய்யும் இந்த முறையில் சார்ஜ் செய்வதற்கு வயர்லெஸ் சார்ஜிங் நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கியுள்ளது.
இந்த நுட்பத்தில் சோதிப்பதற்காக பிரான்ஸ் நாட்டில் உள்ள பாரீஸ் மாநகரில் பிரத்யேகமான டெஸ்ட் டிராக் ஒன்றை நிறுவியுள்ளது. இந்த 100 மீட்டர் டெஸ்ட் டிராக்கில் ரெனோ காங்கோ எனும் காரை பேட்டரியில் இயங்கும் வகையிலும் கம்பி இல்லாத சார்ஜ் முறையை பெறும் வகையில் வன்பொருள் ஒன்றை உருவாக்கியுள்ளது. இதில் பொருத்தப்பட்டுள்ள அலைவாங்கிகள் வாயிலாக மின்கலன் சார்ஜ் செய்யப்படும்.
அதிகபட்சமாக 20 கிலோவாட் திறனை வெளிப்படுத்தும் வகையிலான பேட்டரிகொண்ட இந்த காரின் நுட்பத்தை சமீபத்தில் சோதனை செய்துள்ளது. இந்த நுட்பத்தின் வாயிலாக ரெனோ காங்கோ மணிக்கு 100 கிமீ வேகத்தில் பயணிக்கும். இந்த நுட்பத்தை உருவாக்க 9 ஐரோப்பிய ஒன்றிய நாடுகளைச் சேர்ந்த 25 க்குமேற்பட்ட மோட்டார் நிறுவனங்கள், உதிரிபாகங்கள் தயாரிப்பாளர்கள் , ஆராய்ச்சியாளை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
பிரபலமான மோட்டார் வாகன தயாரிப்பு நிறுவனமான ஹோண்டா இது போன்ற நுட்பத்திற்கான திட்டத்தை செயல்படுத்தி வருகின்றது. இந்த நுட்பத்தில் அதிகபட்சமாக மணிக்கு 155 கிமீ வேகத்தில் பயணிக்கும் வகையில் 180 கிலோவாட் திறன் பெற்ற பேட்டரிகளை சார்ஜ் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.