இந்தியாவின் போக்குவரத்து வரலாற்றை நினைவூட்டும் வகையில் இந்திய அஞ்சல் துறை சிறப்பு தபால் தலைகளை வெளியிட்டுள்ளது. பல்லாக்கு முதல் மெட்ரோ ரெயில்கள் வரை தபால் தலையில் இடம்பெற்றுள்ளது.
போக்குவரத்து தபால் தலை வெளியீடு
டெல்லியில் அமைந்துள்ள இந்தியாவின் ஒரே பாரம்பரிய போக்குவரத்து அருங்காட்சியகத்தின் உதவியுடன் வெளியிடப்பட்டுள்ள 20 சிறப்பு தபால் தலைகளில் 15 தபால்தலைகளில் இடம்பெற்றுள்ள வாகனங்கள் இந்த அருங்காட்சியத்தில் இடம்பெற்றுள்ளது.
வெளியிடப்பட்டுள்ள தபால் தலைகளில் தலா நான்கு பல்லாக்குகள் , மிருகங்களை கொண்டு இழுக்கும் வண்டிகள் , ரிக்ஷா, வின்டேஜ் கார்கள் மற்றும் பொது போக்குவரத்து துறையில் உள்ள வாகனங்களும் இடம்பெற்றுள்ளது.
வெளியிடப்பட்டுள்ள தபால் தலைகளின் விலை ரூ.5 முதல் 25 வரை வழங்கப்பட்டுள்ளது.