புதிதாக பியாஜியோ வெளியிட்டுள்ள அபே சிட்டி பிளஸ் ஆட்டோ விலை ரூ. 1.71 லட்சம் முதல் தொடங்குகின்ற இந்த மூன்று சக்கர வாகனம் மிக சிறப்பான இடவசதியுடன் பெட்ரோல், டீசல், சிஎன்ஜி மற்றும் எல்பிஜி போன்றவற்றில் விற்பனைக்கு வந்துள்ளது.
பியாஜியோவின் இத்தாலி மற்றும் இந்திய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவின் மூலம் இணைந்து தயாரிக்கப்பட்டுள்ள அபே சிட்டி + ஆட்டோவானது வளரும் நகரங்கள் மற்றும் ஊரக பகுதிகளுக்கு ஏற்றதாக விளங்க உள்ளது.
அபே சிட்டி பிளஸ் ஆட்டோ
நடுத்தர பாடி பிரிவில் வெளிவந்துள்ள அபே சிட்டி பிளஸ் மாடலில் முதன்முறையாக மூன்று வால்வுகளை கொண்ட 230சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. சிறப்பான இடவசதி கொண்ட இந்த ஆட்டோவில் அதிகப்படியான லெக்ரூம், ஹெட்ரூம் கொண்ட இந்த மாடல் தாராளமான இருக்கை சொகுசு தன்மையுடன் விளங்குவதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
197 மிமீ கிரவுண்ட் கிளியரண்ஸ் கொண்ட சிட்டி பிளஸ் ஆட்டோவில் 1920 மிமீ வீல் பேஸ் கொண்டிருப்பதுடன், 2880 மிமீ நீளம், அகலம் 1435 மிமீ மற்றும் உயரம் 1970 மிமீ ஆக உள்ளது. இரண்டு புறத்திலும் டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷன் பெற்று டிரம் பிரேக் ஆப்ஷனை கொண்டுள்ளது.
230 cc திறன் பெற்ற பெட்ரோலில் இயங்கும் என்ஜின் அதிகபட்சமாக 10 bhp at 4800 rpm மற்றும் 17.51 Nm டார்க் வழங்குகின்றது. எல்பிஜி வெர்ஷனில் 11 bhp பவரை 4900 rpm-யில் மற்றும் 20.37 Nm டார்க் வழங்குகின்றது.
அபே சிட்டி பிளஸ் டீசல் ஆட்டோவில் 230 சிசி என்ஜின் பெற்ற 8 bhp பவர் மற்றும் 21 Nm டார்க் வழங்குகின்றது. இந்த ஆட்டோ அனைத்து வேரியண்டிலும் 4 வேக கியர்பாக்ஸ் கொண்டதாக விற்பனைக்கு வந்துள்ளது.
அபே சிட்டி+ ஆட்டோவின் மைலேஜ்
சிஎன்ஜி வெர்ஷனில் அபே சிட்டி பிளஸ் ஆட்டோ மைலேஜ் 40 கிமீ ஒரு கிலோவுக்கு
எல்பிஜி வெர்ஷனில் அபே சிட்டி பிளஸ் ஆட்டோ மைலேஜ் 22 கிமீ
டீசல் வெர்ஷனில் அபே சிட்டி பிளஸ் ஆட்டோ மைலேஜ் 42 கிமீ
பியாஜியோ அபே சிட்டி பிளஸ் விலை ரூ. 1.71 லட்சம் முதல் ரூ.1.92 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் மும்பை) ஆகும்.
Petrol – Rs 1,71,709
Diesel – Rs 1,84,110
CNG – Rs 1,92,241
LPG – Rs 1,83,220
5 இலவச சர்வீஸ் உட்பட அபே ஆட்டோவிற்கு 36 மாதம் அல்லது 1,00,000 கிமீ வாரண்டியை பெட்ரோல், சிஎன்ஜி மற்றும் எல்பிஜி மாடல்களுக்கும், டீசல் மாடலுக்கு 42 மாதம் அல்லது 1,20,000 கிமீ வாரண்டி வழங்கப்பட்டுள்ளது.