வரும் மே 14 முதல் ஞாயிற்றுக்கிழமை தோறும் பெட்ரோலிய பொருட்கள் விற்பனை செய்யப்படும் மையங்களின் விடுமுறைக்கு மத்திய பெட்ரோலிய அமைச்சகம் எச்சரிக்கை அறிக்கையை வெளியிட்டுள்ளது.
பெட்ரோலிய அமைச்சகம்
பெட்ரோலியம் பொருட்களை விற்பனை செய்யும் டீலர்களின் கமிஷன் தொகையை அதிகப்படுத்த வேண்டும் என்ற நீன்ட நாளைய கோரிக்கைக்கு மத்திய அரசு எவ்விதமான நடவடிக்கையும் இதுவரை மேற்கொள்ளாத காரணத்தால் மே 14 முதல் ஞாயிற்றுக் கிழமைகளில் விடுமுறையாக அறிவிக்கப்படும் என இந்திய பெட்ரோலிய டீலர்கள் கூட்டமைப்பின் தலைவர் சத்தியநாராயனன் தெரிவித்திருந்தார்.
இந்த கூட்டமைப்பின் கீழ் தமிழகம், கேரளா, கர்நாடகா மற்றும் மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் தான் 25,000-க்கும் மேற்பட்ட பெட்ரோல் பங்குகள் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில், ஞாயிறுதோறும் விடுமுறை அளிக்கப்படும் என்ற அறிவிப்பை மத்திய அரசு கேட்டுக்கொண்டதன் பேரில் தெரிவித்துள்ளதாக பெட்ரோலிய பொருட்கள் விற்பனையாளர் சங்கம் நேற்று தெரிவித்திருந்தது.
இன்று, பெட்ரோலியத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஞாயிற்றுக்கிழமை விடுமுறையில், பெட்ரோல், டீசல் கிடைக்காமல் மக்கள் அவதிப்படும் நிலை ஏற்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. பொதுமக்கள் புகார் அளித்தால், அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பெட்ரோலியத் துறை அமைச்சகம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.