தமிழகம் உள்பட தென்மாநிலங்களில் பெட்ரோல் நிரப்பும் நிலையங்களுக்கு ஞாயிற்றுக் கிழமைகளில் இனி இயங்காது எனவும் பகலில் காலை 9 மணி முதல் 6 மணி வரை மட்டுமே பெட்ரோல் பங்க்குகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் விற்பனை
- கமிஷன் தொகையை அதிகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க வேண்டும்.
- கமிஷன் தொகையை அதிகரிக்காத பட்சத்தில் மே 14 முதல் ஞாயிற்றுக் கிழமைகளில் விடுமுறை விடப்படும்.
- மே 15-ந் தேதி முதல் பகலில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே செயல்படும்.
பெட்ரோலியம் பொருட்களை விற்பனை செய்யும் டீலர்களின் கமிஷன் தொகையை அதிகப்படுத்த வேண்டும் என்ற நீன்ட நாளைய கோரிக்கைக்கு மத்திய அரசு எவ்விதமான நடவடிக்கையும் இதுவரை மேற்கொள்ளாத காரணத்தால் மே 14 முதல் ஞாயிற்றுக் கிழமைகளில் விடுமுறையாக அறிவிக்கப்படும் என இந்திய பெட்ரோலிய டீலர்கள் கூட்டமைப்பின் தலைவர் சத்தியநாராயனன் தெரிவித்துள்ளார்.
இந்த கூட்டமைப்பின் கீழ் தமிழகம், கேரளா, கர்நாடகா மற்றும் மஹாராஷ்டிர உள்ளிட்ட மாநிலங்களில் தான் 25,000-க்கும் மேற்பட்ட பெட்ரோல் பங்குகள் செயல்பட்டு வருகின்றன. இந்தியாவில் செயல்படுகின்ற மொத்த பெட்ரோல் நிலையங்களில் 95 சதவித பங்களிப்பை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெற்றுள்ளது.
அதாவது நாட்டில் மொத்தமாக 56,190 பெட்ரோலிய டீலர்கள் செயல்படுவதில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய மூன்று அரசுத் துறை எண்ணெய் நிறுவனங்களின் கீழ் சுமார் 52,604 பங்க்குகள் செயல்படுகின்றது.
தற்பொழுது பெட்ரோலிய பொருட்கள் விற்பனை செய்யும் டீலர்களுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் விற்பனைக்கு 2 ரூபாய் 56 பைசாவும் , ஒரு லிட்டர் டீசல் விற்பனைக்கு 1 ரூபாய் 62 பைசாவும் கமிஷனாக பெற்று வருகின்றனர்
அபூர்வ சந்திரா கமிட்டி பரிந்துரையின் படி ஒரு லிட்டர் பெட்ரோல் விற்பனைக்கு 3 ரூபாய் 33 பைசாவும் , ஒரு லிட்டர் டீசல் விற்பனைக்கு 2 ரூபாய் 12 பைசாவும் என கமிஷனை அதிகரித்து தர வேண்டும் என்று பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களைக் பெட்ரோலிய டீலர்கள் கேட்டு வருகின்றனர்.
கோரிக்கையை நிறைவேற்றித் தராவிட்டால், மூன்று விதமான போராட்டங்களை பெட்ரோலிய டீலர்கள் செயல்படுத்த திட்டமிட்டுள்ளனர். அவை முதற்கட்டமாக மே மாதம் 10ந் தேதி பெட்ரோல், டீசலைக் கொள்முதல் செய்யாமல், ‘கொள்முதல் இல்லா நாளாக’ கடைப்பிடிப்போம்.
அடுத்து மே மாதம் 14-ந் தேதி தொடங்கி ஞாயிறுதோறும் பெட்ரோல் பங்க்குகளை இயக்க மாட்டோம்.
மே மாதம் 15-ந் தேதி முதல் பெட்ரோல் நிலையங்களை பகலில் மட்டுமே அதாவது காலை 9 மணி முதல் மாலை 6 மணிவரை மட்டுமே இயக்குவோம்,” என இந்திய பெட்ரோலிய டீலர்கள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் ரவி ஷிண்டே தெரிவித்துள்ளார்.
தங்கம் விலை நிலவரம் பெட்ரோல் டீசல் விலை விபரங்கள் மாறும்
சர்வதேச சந்தையில் நிலவுகின்ற கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை அடிப்படடையாக கொண்டு பெட்ரோல், டீசல் விலையை தினசரி மாற்றம் செய்யும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் கூடிய விரைவில் அமல்படுத்த திட்டமிட்டு வருகின்றதாம். தற்போது பெட்ரோல், டீசல் விலை மாற்றம் 15 நாளுக்கு ஒரு முறை செய்யப்பட்டு வருகிறது.