இந்தியாவில் நிகழும் 1.5 லட்சம் சாலை விபத்து மரணங்களில் 80 சதவீத வாகன விபத்துகளுக்கு முக்கிய காரணமே ஊழலால் தரமற்ற வாகனங்கள் மற்றும் பயிற்சி இல்லாத ஓட்டுநர்களுக்கு வழங்கப்படும் அனுமதியே காரணம் என சாலை போக்குவரத்து துறை மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் திரு. நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
ஆந்திராபிரதேசம் போக்குவரத்து துறை சார்பில் நடத்தப்பட்ட சாலை பாதுகாப்பு குறித்த கருத்தரங்கில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் நிதின் கட்காரி பேசுகையில் பழுதான வாகனங்கள் , முறையற்ற பராமரிப்பினால் இயங்கும் வாகனங்கள் மற்றும் திறமையற்ற ஓட்டுநர்களுக்கான ஓட்டுநர் உரிமம் போன்றவற்றில் போக்குவரத்து துறையில் மலிந்துள்ள ஊழலே காரணமாகும்.
வரும்காலத்தில் விபத்துகளை கட்டுப்படுத்தும் நோக்கில் ஊழலை குறைப்பதற்கு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வெளிப்படைத்தன்மை உறுதிப்படுத்துவதன் வாயிலாக ஊழலை கட்டுப்படுத்துவது , ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனங்கள் பதிவு செய்வது , புதுப்பித்தல் போன்றவற்றில் தற்பொழுது உள்ள நடைமுறைகளை மாற்றியமைத்து நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் சிறப்பு ஓட்டுநர் பயிற்சி மையம் மற்றும் ஆராய்ச்சி மையங்களை அமைக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் நாடு முழுவதும் உள்ள அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளிலும் குறிப்பிட்ட இடைவெளியில் அவசர சிகிச்சை மையங்கள் அமைப்பது மற்றும் கூடுதலாக ஆம்பலன்ஸ் சேவையை அதிகரிப்பது , நாட்டில் உள்ள மிகுந்த விபத்து ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ள 786 இடங்களை சீரமைப்பதினால் அடுத்த சில வருடங்களில் விபத்தினை பாதியாக குறைக்கப்படும் என அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் திரு. வெங்கையா நாயுடு பேசுகையில் , கல்வி , கட்டுமானம் மற்றும் கடும் சட்டங்களை அமலாக்குவது விபத்துகளை குறைக்கும் மேலும் குழந்தைகள் மற்றும் ஓட்டுநர்களுக்கு சாலை போக்குவரத்து விதிகள் குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும் என கூறியுள்ளார்.
ஆந்திரா முதல்வர் திரு. சந்திரபாபு நாயுடு பேசுகையில், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது, அதிகபட்ச பாரம் , அதிக வேகம் போன்றவைகளும் விபத்துகளுக்கு முக்கிய காரணமாக உள்ளதால் அவற்றை கட்டுப்படுத்த மாநிலம் முழுவதும் சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
மத்திய அரசாங்கம் சாலைகளை மேம்படுத்துவது மற்றும் விபத்துகளை தடுக்கும் நோக்கில் ரூ.11,000 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது. விபத்து குறித்து உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்க….மக்களே..