இந்திய சந்தையில் பேட்டரியில் இயங்கும் ஒகினவா ஐ-பிரெயஸ் மின்சார ஸ்கூட்டர் ரூபாய் 1.15 லட்சத்தில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. 450க்கு மேற்பட்ட முன்பதிவை i-praise ஸ்கூட்டர் பெற்றுள்ளது.
Okinawa i-Praise: ஒகினவா ஐ-பிரெயஸ்
ஒகினாவா நிறுவனத்தின் புதிய ஐ பிரெயஸ் ஸ்கூட்டர் மாடலுக்கு மிகுந்த வரவேற்பை பெற்று நாடு முழுவதும் 450 முன்பதிவுகளை பெற்றிருக்கின்றது. முதற்கட்டமாக 500 ஸ்கூட்டர்களை விற்பனை செய்ய இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
ஐ- பிரெயஸ் ஸ்கூட்டரில் இடம்பெற்றுள்ள 2.9kWh பேட்டரி மின் மோட்டார் அதிகபட்சமாக இந்த ஸ்கூட்டடர் மணிக்கு 55 முதல் 75 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறன் வழங்கவல்லதாக இருக்கும். இதில் வழங்கப்பட்டுள்ள பேட்டரி மிக எளிமையாக கழற்றி மாட்டும் வசதியுடன் , இந்த லித்தியம் அயான் பேட்டரி (மற்ற லெட் ஆசிட் பேட்டரியை விட 40 சதவீத எடை குறைவானதாகும்) முழுமையாக சார்ஜ் ஏறுவதற்கு 2 முதல் 3 மணி நேரம் மட்டும் எடுத்துக் கொள்ளும், இதன் முக்கிய அம்சமாக முழுமையான சார்ஜிங் செய்தருந்தால் அதிகபட்சமாக 160 முதல் 180 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐ பிரெயஸ் ஸ்கூட்டரில் உள்ள முக்கிய வசதியாக ஸ்மார்ட்போனை இணைக்கப்படுகின்ற Okinawa Eco app வாயிலாக பேட்டரி நிலை , சர்வீஸ் இன்டர்வெல், ட்ரீப் மீட்டர் உள்ளிட்ட வசதிகளை வழங்க உள்ளது.
ஒகினவா ஐ-பிரெயஸ் மின்சார ஸ்கூட்டர் விலை ரூ.1.15 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்)