இந்தியாவில் நிசான் தயாரிக்கின்ற ஒரே மாடலான மேக்னைட் எஸ்யூவி மாடலின் விலையை இரண்டு சதவீத முறை உயர்த்துவதாக அறிவித்துள்ளது.
சமீபத்தில் வெளியிடப்பட்ட புதிய மேக்னைட் அறிமுக சலுகையாக ரூபாய் 6 லட்சம் விலையில் முந்தைய மாடலை போலவே தொடங்கினாலும் முதல் பத்தாயிரம் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த விலை பொருந்தும் என தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில், ஏற்கனவே 10,000 வாடிக்கையாளர்ளை கடந்த இந்த காரின் சலுகை டிசம்பர் 31, 2024 வரை தற்பொழுது நீட்டிக்கப்பட்டுள்ளது.
உற்பத்தி மூலப் பொருட்களின் விலை உயர்வு, செயல்பாடு செலவுகளை எதிர்கொள்ள விலை உயர்த்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் நிசான் நிறுவனம் கூடுதலாக முழுமையாக வடிவமைக்கப்பட்ட மாடலாக இறக்குமதி செய்து எக்ஸ்-ட்ரெயில் மட்டுமே விற்பனை செய்து வருகின்றது.
சமீபத்தில் நிசானின் மேக்னைட் ஒட்டுமொத்த இந்திய விற்பனை ஐந்து லட்சத்தை கடந்துள்ள நிலையில் பல்வேறு வெளிநாடுகளுக்கு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சுமார் 65 நாடுகளுக்கு மேல் மேக்னைட் எஸ்யூவி காரை ஏற்றுமதி நிசான் இந்தியா செய்து வருகின்றது.