புதிய ரெனால்ட் டஸ்ட்டர் அடிப்படையிலான எஸ்யூவி மற்றும் சிறிய ரக 7 இருக்கை பெற்ற ட்ரைபர் அடிப்படையிலான எம்பிவி என இரு மாடல்களை இந்திய சந்தையில் தயாரித்து விற்பனைக்கு கொண்டு வருவதனை நிசான் உறுதிப்படுத்தியுள்ளது.
நிசான் டஸ்ட்டர்
இந்திய சந்தையில் முன்பாக டெரோனோ என்ற பெயரில் நிசான் நிறுவனம் டஸ்ட்டர் மாடலை விற்பனை செய்து வந்த நிலையில் டஸ்ட்டர் சில வருடங்களாக நீக்கப்பட்டுள்ளதால், டெரோனோ விடுவிக்கப்பட்டிருந்தது. தற்பொழுது மீண்டும் சந்தைக்கு வரவுள்ள ரெனால்ட் டஸ்ட்டர் 2026 ஆம் ஆண்டின் துவக்க மாதங்களில் எதிர்பார்க்கப்படுவதனால், நிசான் பெயரில் வெளிவரவுள்ள மாடல் அனேகமாக புதிய பெயருடன் பெட்ரோல் மற்றும் எல்பிஜி என இரு ஆப்ஷனிலும் 2026 ஆம் ஆண்டின் மத்தியில் விற்பனைக்கு வரும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
டஸ்ட்டர் அடிப்படையிலான 5 இருக்கை மட்டுமல்லாமல், 7 இருக்கை பிக்ஸ்டெர் அடிப்படையில் வரக்கூடும்.
நிசான் 7 சீட்டர் எம்பிவி
தற்பொழுது சந்தையில் உள்ள ட்ரைபர் எம்பிவி காரினை ரீபேட்ஜிங் செய்து வரவுள்ள புதிய 7 இருக்கை எம்பிவி ரக மாடலில் ட்ரைபர் போலவே 1.0 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டு 72hp பவரை வெளிப்படுத்தலாம். கூடுதலாக டர்போ வேரியண்ட் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்ற நிசான் எம்பிவி விலை ரூ.7 லட்சத்துக்குள் துவங்குவதுடன் விற்பனைக்கு அனேகமாக அடுத்த மூன்று முதல் ஆறு மாதங்ளுக்குள் சந்தையில் கிடைக்க துவங்கும் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
நிசான் எஸ்யூவி, எம்பிவி என இரண்டு மாடல்களும் இந்திய சந்தைக்கு மட்டுமல்லாமல் பல்வேறு ஏற்றுமதி சந்தைகளுக்காக சென்னையில் உள்ள ரெனால்ட்-நிசான் கூட்டு தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் என உறுதி செய்யப்பட்டுள்ளது.