வரும் ஜனவரி 2021 முதல் நிசான் இந்தியா நிறுவனத்தின் நிசான் மற்றும் டட்சன் கார்கள் விலையை 5 சதவீதம் உயர்த்தப்படுவதாக அறிவித்துள்ளது. இந்நிறுவனத்தின் நிசான் மேக்னைட் எஸ்யூவி ரூ.50,000 வரை வேரியண்ட் வாரியாக விலை உயர்த்தப்பட உள்ளது.
நாட்டின் பெரும்பாலான மோட்டார் நிறுவனங்கள் மாருதி சுசுகி, ஹூண்டாய், மஹிந்திரா, டாடா, கியா, பிஎம்டபிள்யூ, ரெனால்ட் உட்பட பல்வேறு இரு சக்கர வாகன நிறுவனங்கள் தங்களுடைய கார்கள் மற்றும் பைக்குகளின் விலையை உயர்த்துவதாக அறிவித்து வரும் நிலையில் இப்பொழுது நிசான் நிறுவனமும் இந்த பட்டியலில் இணைந்துள்ளது.
ஒவ்வொரு வேரியண்ட் வாரியாக 5 % வரை விலை உயர்த்த உள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளது. இந்நிறுவன அறிக்கையில் விலை உயர்வானது அதிகரித்து வரும் உற்பத்தி மூலப் பொருட்களின் விலையை காரணமாக குறிப்பிட்டுள்ளது.
நிசான் நிறுவனம் ஜிடி-ஆர், கிக்ஸ் மற்றும் மேக்னைட் உட்பட டட்சன் பிராண்டில் கோ, கோ பிளஸ் மற்றும் ரெடி-கோ கார்களை விற்பனை செய்து வருகின்றது.