பஜாஜ் ஆட்டோ மற்றும் டிரையம்ப் கூட்டணியில் வெளியாகியுள்ள ஸ்பீட் 400 மற்றும் ஸ்கிராம்பளர் 400 எக்ஸ் அடிப்படையில் 250cc என்ஜின் பெற்ற ஸ்பீட் 250, ஸ்கிராம்பளர் 250 X விற்பனைக்கு அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சமீபத்தில் டிரையம்ப் இணையதளத்தின் தொடர்பு பகுதியில் ரோட்ஸ்டெர் 250 மற்றும் ஸ்கிராம்பளர் 250 என்ற பெயர்கள் மாடல்களின் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல் கசிந்துள்ளது.
Triumph 250cc coming soon
அதிகாரப்பூர்வமாக எந்த உறுதியும் செய்யப்படாத தகவலாக கிடைத்துள்ள 250சிசி என்ஜின் பெற உள்ள மாடல்கள் விற்பனைக்கு வந்தால் மிகவும் சவாலாக ரூ.1.70 லட்சத்தில் துவங்க வாய்ப்புகள் உள்ளது.
புதிய 250cc என்ஜின் ஒற்றை சிலிண்டர் ஆக இருக்கும், பெரிய 400cc மாடலை விட சற்றே குறைவான பவர் மற்றும் டார்க் வெளிப்படுத்தலாம். அனேகமாக 25-30 bhp பவர் மற்றும் 25 Nm டார்க் வெளிப்படுத்தலாம். ட்ரையம்ப் ரோட்ஸ்டெர் 250 என்ற பெயர் ஸ்பீட் 250 மற்றும் ஸ்க்ராம்ப்ளர் 250 X என அழைக்கப்படலாம். இந்த மாடலிலும் 6 வேக கியர்பாக்ஸ் பெறலாம்.
யூஎஸ்டி ஃபோர்க் மாற்றாக விலையை குறைப்பதற்கு டெலிஸ்கோபிக் ஃபோர்க் பெற்றிருக்கலாம். இருபக்க டயரிலும் டிஸ்க் பிரேக் பெற்றிருக்கும்.
ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 பைக்கிற்கு சவால் விடுக்கும் வகையில் வரவுள்ள ஸ்பீட் 250 மற்றும் ஸ்கிராம்பளர் 250 X வருகை குறித்து எந்த உறுதியான தகவலும் தற்பொழுது இல்லை.