இந்தியாவில் மிக வேகமாக பிரபலமாகி வருகின்ற எலெக்ட்ரிக் கார் மாடலான எம்ஜி வின்ட்சர் இவி காரின் விலை வேரியண்ட் வாரியாக ரூ.50,000 உயர்த்தப்பட்டும், BAAS முறையில் வாங்குபவர்களுக்கு ஒரு நிமிடத்திற்கான சார்ஜிங் ரூ.3.90 பைசாவாக உயர்த்தப்பட்டுள்ளது.
விற்பனைக்கு வெளியிடப்பட்ட மூன்று மாதங்களில் அமோகமான வரவேற்பினை பெற்று 10 ஆயிரத்திற்கும் கூடுதலான எண்ணிக்கையில் சாலையில் வின்ட்சர் இவி ஓடிக்கொண்டிருக்கின்றன, இந்நிலையில் ஏற்கனவே இந்நிறுவனம் அறிவித்த முதல் 10 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கான சிறப்பு சலுகை நிறைவுற்றதை தொடர்ந்து தற்பொழுது வேரியண்ட் வாரியாக முழுமையாக கட்டணம் செலுத்தி வாங்குபவர்களுக்கு ரூபாய் 50,000 வரை விலையை உயர்த்தியுள்ளது.
பேட்டரி எஸ் ஏ சர்வீஸ் என்ற முறையில் பேட்டரியை வாடகைக்கு எடுக்கும் திட்டத்தில் தொடர்ந்து எக்ஸ்-ஷோரூம் விலையில் எந்த மாற்றங்களும் இல்லை, ஆனால் ஒரு நிமிடத்திற்கான சார்ஜிங் கட்டணம் 0.40 பைசா வரை உயர்த்தப்பட்டு தற்பொழுது ரூபாய் 3.9 பைசாவாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. முன்பாக இந்த திட்டத்தில் விலை ரூபாய் 3.50 காசுகளாக இருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
எம்ஜி வின்ட்சர் இவியில் 38Kwh பேட்டரி பேக்கை கொண்டுள்ள இந்த மாடல் பிஎம்எஸ்எம் மோட்டாருடன் முன்புற வீல் டிரைவ் அமைப்பினைப் பெற்று அதிகபட்சமாக 134 hp பவர் மற்றும் 200 நியூட்டன் மீட்டர் டார்கினை வழங்குகின்றது கூடுதலாக இந்த பாடலில் ஈகோ ப்ளஸ், ஈக்கோ, நார்மல் மற்றும் ஸ்போர்ட்ஸ் போன்ற டிரைவிங் போர்டுகள் பெற்றுள்ளன முழுமையான சிங்கிள் சார்ஜில் 331 கிலோமீட்டர் பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
2025 எம்ஜி வின்ட்சர் இவி எக்ஸ்ஷோரூம் விலை பட்டியல்
Variants | Ex-showroom price | Ex-showroom with BaaS | Battery rental cost with Baas |
Excite | Rs. 14 lakh | Rs. 9.99 lakh | Rs. 3.9/km |
Exclusive | Rs. 15 lakh | Rs. 10.99 lakh | Rs. 3.9/km |
Essence | Rs. 16 lakh | Rs. 11.99 lakh | Rs. 3.9/km |
எனவே, தற்பொழுது பேட்டரியுடன் கூடிய வகையில் வாங்கும் பொழுது முழுமையான ஆன்ரோடு விலை ரூ.15.10 லட்சம் முதல் ரூ.16.70 லட்சம் வரை அமைத்துள்ளது.