ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் தனது கார்களின் விலையை மூன்று சதவீதம் வரை வரும் ஜனவரி 1 2025 முதல் உயர்த்துவதாக அதிகாரப்பூர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எம்ஜி மோட்டார் மட்டுமல்ல பல்வேறு நிறுவனங்கள் தொடர்ந்து விலையை உயர்வை அறிவித்து வருகின்ற நிலையில் தற்போது எம்ஜி நிறுவனமும் இணைந்துள்ளது.
பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்களைப் போல இந்நிறுவனமும் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிகரித்து வரும் பண வீக்கம் மற்றும் செயல்பாட்டிற்கான செலவினங்கள், உற்பத்தி மூலப்பொருட்களின் விலை உயர்வு போன்ற காரணங்களால் விலை உயர்வை கட்டுப்படுத்த முடியவில்லை என இந்நிறுவனத்தின் அறிக்கையில் தலைமை வர்த்தக பிரிவு தலைவர் சத்தேந்திர பாஜவ்சிங் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் எலெக்ட்ரிக் வாகன சந்தையில் மிக வேகமாக வளர்ந்து வரும் இந்நிறுவனம் வின்ட்சர் இவி, காமெட் இவி, இசட்எஸ் இவி என சிறப்பான மாடல்களை கொண்டிருக்கின்றது. அதே நேரத்தில் வருகின்ற ஜனவரி 2025-ல் எம்ஜி செலக்ட் என்ற புதிய டீலர்கள் மூலம் சைபர்ஸ்டெர் என்ற பிரீமியம் ஸ்போர்ட்ஸ் ரக காரினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய உள்ளது.